தென்னிந்திய திரையுலகின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக திகழ்ந்த நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் கடந்த ஜூன் 28-ம் தேதி இரவு உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். மீனாவின் கணவர் உயிரிழந்த செய்தி தென்னிந்திய திரை உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

 48 வயதான நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகருக்கு நுரையீரலில் மோசமான அலர்ஜி ஏற்பட்டு அதற்கான சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் கோவிட்19 தொற்றால் பாதிக்கப்பட்டு அவதிக்குள்ளானார். இதனையடுத்து நுரையீரல் பாதிப்பு தீவிரமடைந்த நிலையில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். 

இருப்பினும் சிகிச்சை பலனின்றி நுரையீரல் செயலிழந்து உயிரிழந்தார். நடிகை மீனாவின் கணவர் மறைவுக்கு திரையுலகைச் சார்ந்த பிரபலங்களும், பலகோடி ரசிகர்களும், பொதுமக்களும் தங்களது இரங்கலை தெரிவித்தனர். இந்நிலையில் தனது கணவரின் மறைவுக்குப் பின் நடிகை மீனா முதல் முறை அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

“எனது அன்பு கணவர் வித்யாசாகரை இழந்ததில் ஆழ்ந்த சோகத்தில் இருக்கிறேன். எனவே இந்த தருணத்தில் எங்களுக்கு தேவையான தனிமையை மதிக்கும்படி அனைத்து ஊடகத்துறையினர் இடமும் கேட்டுக்கொள்கிறேன். 
இந்த விஷயம் தொடர்பாக தவறான செய்திகளை பரப்புவதை நிறுத்திக்கொள்ளுங்கள். 
இது போன்ற கடினமான காலகட்டத்தில், என்னுடனும் என் குடும்பத்தினருடனும் துணை நின்ற அனைத்து நல்ல இதயங்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல் தங்களால் முடிந்தவரை முயற்சி செய்த மருத்துவ அணியினருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் நமது தமிழக முதலமைச்சர், சுகாதாரத்துறை அமைச்சர், ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ், சக கலைஞர்கள், நண்பர்கள், குடும்பத்தினர், ஊடகம் மற்றும் எனது அன்பான ரசிகர்கள் என அனைவரின் அன்பிற்கும் பிரார்த்தனைகளும் நன்றி!” 

என நடிகை மீனா தெரிவித்துள்ளார். மீனாவின் அந்த பதிவு இதோ…


 

 

View this post on Instagram

A post shared by Meena Sagar (@meenasagar16)