பூவரசம் பீப்பீ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமான இயக்குனர் ஹலிதா ஷமீம் தொடர்ந்து தமிழ் சினிமா ரசிகர்கள் விரும்பும் அழகிய FEEL GOOD திரைப்படங்களை வழங்கி வருகிறார். அந்த வகையில் ஹலிதா ஷமீம் இயக்கத்தில் வெளிவந்த சில்லுக் கருப்பட்டி மற்றும் ஏலே திரைப்படங்கள் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

கடைசியாக இந்த ஆண்டு (2022) அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான புத்தம் புது காலை விடியாதா ஆன்தாலஜி வெப்சீரிஸில் LONERS எனும் எபிசோட் ஹலிதா ஷமீம் இயக்கத்தில் வெளிவந்தது. இந்த வரிசையில் அடுத்ததாக ஹலிதா ஷமீம் இயக்கத்தில் உலக சினிமாவை கவனிக்க வைக்கும் வகையில் தயாராகி வரும் திரைப்படம் மின்மினி. 

பொதுவாக படத்தில் முன்னணி கதாப்பாத்திரங்கள் வெவ்வேறு வயதில் இருக்கும் பட்சத்தில் குழந்தைகளாக நடித்த நடிகர்களுக்கு பதிலாக வளர்ந்த மற்ற நடிகர்களை வைத்து படமாக்கப்படுவது வழக்கம். ஆனால் ஹலிதா ஷமீம் குழந்தைகளாக நடித்த நடிகர்களையே வைத்து 6 ஆண்டுகள் கழித்து மீண்டும் படமாக்கியுள்ளார். இயக்குனராக ஹலிதா ஷமீம் எடுத்திருக்கும் இப்பெரும் முயற்சி சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக கடந்த 2015 ஆம் ஆண்டு மின்மினி படத்தின் படப்பிடிப்பை தொடங்கிய இயக்குனர் ஹலிதா ஷமீம், மின்மினி படத்தின் முதல் பாதியை படமாக்கிவிட்டார். அந்த சமயத்தில் குழந்தை நட்சத்திரங்களாக நடித்தவர்கள் அனைவரும் வளர்ந்த நிலையில் தற்போது 6 ஆண்டுகளுக்கு பிறகு (2022) கடந்த மே மாதம் தொடங்கி மின்மினி திரைப்படத்தின் இரண்டாம் பாதியையும் நிறைவு செய்து தற்போது மொத்த படப்பிடிப்பையும் முடித்துள்ளார் இயக்குனர் ஹலிதா சமீம்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “நெடு நாள் கண்டதும் நெடுந்தூரம் சுமந்ததுமான இக்கனவு படமாக்கப்பட்டுவிட்டது என்பதனை மனநிறைவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்! நன்றி!!!” என தெரிவித்து படப்பிடிப்பு தளத்தில் இருந்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இயக்குனர் ஹலிதா ஷமீமின் அந்த பதிவு இதோ…
 

It's a wrap for #Minmini.
My mind is so calm and serene as we complete the shoot for Minmini.
Could feel the tranquil sunshine within me.

நெடு நாள் கண்டதும்,நெடுந்தூரம் சுமந்ததுமான இக்கனவு படமாக்கப்பட்டுவிட்டது என்பதனை மன நிறைவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்! நன்றி!!! pic.twitter.com/72kczRN5uo

— Halitha (@halithashameem) June 30, 2022