தமிழ் திரையுலகில் தன்னிகரில்லா நாயகர்களில் ஒருவர் அஜித் இவருக்கென ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் நடிப்பில் கடைசியாக வலிமை படம் பிப்ரவரி 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த படத்தினை போனி கபூர் தயாரித்திருந்தார்,எச் வினோத் இந்த படத்தினை இயக்கியிருந்தார்.

இதனை தொடர்ந்து மீண்டும் போனி கபூர் தயாரிப்பில் எச் வினோத் இயக்கத்தில் உருவாகும் AK 61 படத்தில் நடிக்கவுள்ளார்.இதனை அடுத்து முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் AK 62 படத்தில் நடிக்கவுள்ளார்.விக்னேஷ் சிவன் இயக்கவுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

AK 61 படத்தின் ஷூட்டிங் ஹைதராபாத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.வினோத் இயக்கத்தில் தயாராகி வரும் இந்த படத்தில் ராஜதந்திரம் வீரா உள்ளிட்ட பல நடிகர்கள் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.மஞ்சு வாரியார் இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.

இந்த படத்தின் ஷூட்டிங்கிற்கு இடையே அஜித்வெளிநாட்டில் பைக் ட்ரிப்,துப்பாக்கி சுடும் போட்டி உள்ளிட்டவற்றில் கலந்துகொண்டு வந்தார்.தற்போது அஜித் தனது பைக் குழுவினருடன் வடஇந்தியாவிற்கு பைக் ட்ரிப் ஒன்று சென்றுள்ளார்.இந்த பயணத்தில் AK61 பட ஹீரோயின் மஞ்சு வாரியார் இணைத்துள்ளார்,இது குறித்த சில புகைப்படங்களை அவர் வெளியிட்டுள்ளார்.இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.