உலகநாயகன் கமல்ஹாசன் - சீயான் விக்ரம் - சிலம்பரசன்TR ஆகியோர் அஜித் குமாரின் தந்தை மறைவுக்கு இரங்கல்! விவரம் உள்ளே

கமல் விக்ரம் சிலம்பரசன் ஆகியோர் அஜித்குமாரின் தந்தை மறைவுக்கு இரங்கல்,kamal haasan vikram silambarasan tr condolences to ajith father death | Galatta

தமிழ் சினிமாவின் நட்சத்திர நாயகராக பல கோடி ரசிகர்களின் ஃபேவரிட் ஹீரோவாக திகழும் அஜித்குமார் அவர்களின் தந்தை P.சுப்பிரமணியம் இன்று மார்ச் 24 ஆம் தேதி அதிகாலை காலமானார். 85 வயதான P.சுப்பிரமணியம் அவர்கள் வயது மூப்பு காரணமாக உடல் நலக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்த நிலையில், இன்று அதிகாலை 4:30 மணி அளவில் உயிரிழந்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் அஜித் குமாரின் தந்தையாரின் மறைவுக்கு கலாட்டா குழுமம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. மேலும் பல கோடி ரசிகர்களும் முன்னணி பிரபலங்களும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் முன்னதாக தமிழ்நாட்டின் முதலமைச்சர் மாண்புமிகு.திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது இரங்கல் அறிக்கையை வெளியிட்டார். தொடர்ந்து நடிகர், தயாரிப்பாளர், சட்டமன்ற உறுப்பினர் மற்றும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சரான உதயநிதி ஸ்டாலின் அவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தியதோடு தனது இரங்கலையும் வெளியிட்டார். இதனிடையே தளபதி விஜய் அவர்கள் அஜித் குமார் அவர்களின் வீட்டிற்கு நேரில் சென்று அஜித்குமார் அவர்களின் தந்தை யார் சுப்பிரமணியம் அவர்களின் பூத உடலுக்கு  அஞ்சலி செலுத்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில், தற்போது இந்திய சினிமாவின் ஈடு இணையற்ற கலைஞரும் மக்கள் நீதி மய்ய தலைவருமான உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள், தனது ட்விட்டர் பக்கத்தில், “தம்பி அஜித் குமார் அவர்களின் அப்பா சுப்பிரமணியம் மறைந்த செய்தி கேட்டு வருத்தமடைந்தேன். தந்தையை இழந்து வாடும் அஜித் குமாருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் எனது இரங்கலையும் ஆறுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என தனது இடங்களை பதிவு செய்துள்ளார். அதே போல் நடிகர் சீயான் விக்ரம், “அஜித் குமார் அவரது தாயார் மற்றும் குடும்பத்தாருக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். ஒருவரது தந்தையின் இழப்பு... அதுவும் மிகவும் இனிமையான அக்கறை கொண்ட சுப்பிரமணியம் அங்கிள் போன்ற ஒருவரை யாரும் ஈடு செய்ய முடியாது அவரது ஆத்மா சாந்தி அடையட்டும் வலிமையோடு இருங்கள் அஜித்” என தனது இரங்கலை பதிவிட்டுள்ளார்.

மேலும் நடிகர் சிலம்பரசன்.TR தனது ட்விட்டர் பக்கத்தில், “அஜித் சாரிடமும் அவரது குடும்பத்தாரிடமும் அவரது தந்தை மறைவுக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த கடினமான காலகட்டத்தில் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் கடவுள் வலிமையை கொடுக்க வேண்டும் என வேண்டிக் கொள்கிறேன் அவரது ஆத்மா அமைதியை அடையட்டும்” என பதிவிட்டுள்ளார். இன்னும் பல நட்சத்திரங்களும் பிரபலங்களும் ரசிகர்களும் தங்களது இரங்கலைத் தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர். உலக நாயகன் கமல்ஹாசன் - சீயான் விக்ரம் மற்றும் நடிகர் சிலம்பரசன்.TR ஆகியோர் நடிகர் அஜித்குமாரின் தந்தை மறைவுக்கு வெளியிட்ட இரங்கல் பதிவுகள் இதோ…
 

தம்பி #Ajithkumar அவர்களின் அப்பா திரு. சுப்பிரமணியம் மறைந்த செய்தி கேட்டு வருத்தமடைந்தேன். தந்தையை இழந்து வாடும் அஜித் குமாருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் எனது இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

— Kamal Haasan (@ikamalhaasan) March 24, 2023

My heartfelt condolences to Ajith, his mother and family. The loss of one’s dad .. especially someone as caring and sweet as Subramaniam uncle can never be compensated. May his soul rest in peace. Stay strong Ajith. pic.twitter.com/eY081S4WQG

— Vikram (@chiyaan) March 24, 2023

My sincere condolences to Ajith sir & his family on the demise of his father
MR P.S Mani.
May god give you & your family strength through this difficult time & may his soul rest in peace 🙏🏻

— Silambarasan TR (@SilambarasanTR_) March 24, 2023

'தமிழின்றி நாம் இல்லை!'- விஜய் டிவி ப்ரோமோவில் மாண்புமிகு முதல்வர் மு க ஸ்டாலின்! அட்டகாசமான வீடியோ இதோ
சினிமா

'தமிழின்றி நாம் இல்லை!'- விஜய் டிவி ப்ரோமோவில் மாண்புமிகு முதல்வர் மு க ஸ்டாலின்! அட்டகாசமான வீடியோ இதோ

ரோஜா சீரியல் நாயகி பிரியங்கா நல்காரிக்கு திடீர் திருமணம்... சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகும் புகைப்படங்கள் இதோ!
சினிமா

ரோஜா சீரியல் நாயகி பிரியங்கா நல்காரிக்கு திடீர் திருமணம்... சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகும் புகைப்படங்கள் இதோ!

சிலம்பரசன்TR இயக்க வாய்ப்புள்ள படங்கள் - இணைந்து பணியாற்றிய அனுபவங்கள் பகிர்ந்த கௌதம் கார்த்திக்! ஸ்பெஷல் வீடியோ உள்ளே
சினிமா

சிலம்பரசன்TR இயக்க வாய்ப்புள்ள படங்கள் - இணைந்து பணியாற்றிய அனுபவங்கள் பகிர்ந்த கௌதம் கார்த்திக்! ஸ்பெஷல் வீடியோ உள்ளே