தனுஷ் உடன் கைகோர்க்கும் இயக்குனர் எச் வினோத் .. உற்சாகத்தில் ரசிகர்கள் - அட்டகாசமான அறிவிப்பு இதோ..

தனுஷை இயக்கும் துணிவு இயக்குனர் எச் வினோத் - H Vinoth open up his next movie with Dhanush | Galatta

சதுரங்கவேட்டை திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமாகி தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான அஜித் குமார் அவர்களை மூன்று முறை இயக்கி பிளாக் பஸ்டர் ஹிட்களை தொடர்ந்து கொடுத்து வரும் முன்னணி இயக்குனர் எச்.வினோத். இவர் இயக்கத்தில் சமீபத்தில் அஜித் குமார் நடிப்பில் துணிவு திரைப்படம் கடந்த ஜனவரி மாதம் பொங்கலையொட்டி வெளியானது. ரசிகர்களில் ஆரவாரத்துடன் வெளியான துணிவு திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் உலகளவில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இதற்கு முன்பு இரண்டு முறை அஜித்துடன் கூட்டணி அமைத்த இயக்குனர் எச் வினோத். வெவ்வேறு கதைகளத்தில் படங்களை கொடுத்து ரசிகர்களை ஈர்த்து வைத்துள்ளார். தற்போது அவர் தனது அடுத்த படத்திற்கான வேலையில் இறங்கியுள்ளார்.

இந்நிலையில் எச் வினோத் தனது அடுத்த படம் உலக நாயகன் கமல் ஹாசனை இயக்கவுள்ளதாகவும் அது அரசியல் களம் உள்ள படமாகவும் இருக்கும் என்று தகவல் முன்னதாக வெளியாகியது. இதனையடுத்து ரசிகர்கள் உற்சாகத்தில் அந்த தகவலை வைரலாக்கி வந்தனர். இந்நிலையில் தனியார் கல்லூரி நிகழ்வில் கலந்து கொண்ட இயக்குனர் எச் வினோத் அவர்களிடம் சதுரங்க வேட்டை படம் போல் ஒரு கதை களத்தில் எப்போது படம் இயக்க போறீர்கள்? என்ற கேள்விக்கு அவர் நடிகர் தனுஷ் அவர்களிடம் அதுபோன்ற ஒரு கதைகளத்தை கொண்ட ஒரு கதையை சொல்லியிருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் ரசிகர்களால் வைரலாகி வருகிறது.  

கடந்த 2014 ம் ஆண்டு ஒளிப்பதிவாளர் நடராஜ் எனும் நட்டி நடிப்பில் வெளியான திரைப்படம் ‘சதுரங்க வேட்டை வித்யாசமான கதைக் களத்தை கொண்டு எதார்த்தமான சூழலை படமாக்கி ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார் இயக்குனர் எச் வினோத். படம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதுவரை தமிழ் சினிமாவில் இல்லாத கதைக்களத்தை அட்டகாசமான திரைக்கதையுடன் கொடுத்திருப்பார் எச் வினோத்.  இது போன்ற திரைக்கதையில் தனுஷ் இணைய வாய்ப்பு உள்ளதால் அவர் ரசிகர்கள் உற்சாகத்தில் மிதந்து வருகின்றனர். ஆனால் தனுஷ் அவர் கையில் ஏரளாமான படங்களை வைத்துள்ளார். தற்போது தனுஷ் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார். அந்த படம் முடிந்து அவருடைய 50 வது படத்தை அவரே இயக்கி நடிக்கவும் இருக்கிறார். அந்த படம் முடிந்து இயக்குனர் வெற்றி மாறன் கூட்டணியில் வடசென்னை 2 படத்தில் இணையவுள்ளார். இதனிடையே எப்போது எச் வினோத் கூட்டணி அமையும் என்பதே தற்போது ரசிகர்களின் மனநிலையாகவுள்ளது. தனுஷ் படத்தை இயக்குவதற்குமுன்பு இயக்குனர் எச் வினோத் நடிகர் யோகி பாபு வை இயக்கவுள்ளதாக ஒரு பேச்சு முன்னதாக எழுந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா

"அஜித் சார் குடும்பமே விரக்தியில் இருக்காங்க" - பெசண்ட் நகர் ரவி உருக்கம் - முழு வீடியோ இதோ..

“மஞ்சிமா மட்டும் இல்லனா நான் இங்க வந்திருக்க முடியாது” மனம் திறந்த கௌதம் கார்த்திக் – சுவாரஸ்யமான நேர்காணல் இதோ..
சினிமா

“மஞ்சிமா மட்டும் இல்லனா நான் இங்க வந்திருக்க முடியாது” மனம் திறந்த கௌதம் கார்த்திக் – சுவாரஸ்யமான நேர்காணல் இதோ..

அமீர், யுவன் கூட்டணியில் புதிய படம்.. உற்சாகத்தில் ரசிகர்கள் – வைரலாகும் அறிவிப்பு  இதோ..
சினிமா

அமீர், யுவன் கூட்டணியில் புதிய படம்.. உற்சாகத்தில் ரசிகர்கள் – வைரலாகும் அறிவிப்பு இதோ..