தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்திற்கு எதிரான வழக்கு.. சென்னை நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு..!

தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் விவரம் உள்ளே - high court verdict on dhanush and Aishwarya rajinikanth case | Galatta

தென்னிந்தியாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷ் தற்போது தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் போன்று பல மொழி படங்களில் நடித்து வருகிறார். அதன்படி தற்போது அவர் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் 'கேப்டன் மில்லர்' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். அதை தொடர்ந்து தனது 50 வது படத்தை தானே இயக்கி நடிக்கவுள்ளார் தனுஷ். பின்னர் இயக்குனர் மாரி செல்வராஜ் உடன் கூட்டணி மற்றும் இந்தியில் ராஞ்சனா பட இயக்குனருடன் புதிய படத்திலும் நடிக்கவுள்ளார்.  இந்திய சினிமாவில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் நடிகர் தனுஷ் க்கு எதிராக அளிக்கப்பட்ட புகாரில் நீதிமன்றம் தற்போது தீர்ப்பளிந்துள்ளது.

கடந்த 2014 ம் ஆண்டு தனுஷ் நடிப்பில் இயக்குனர் வேல்ராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் 'வேலையில்லா பட்டதாரி'. தனுஷ் அவர்களின் முன்னாள் மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தயாரிப்பில் உருவான இப்படத்தில் தனுஷ் ஹீரோவாக நடிக்க அவருக்கு ஜோடியாக அமலா பால் நடித்திருந்தார். மேலும் இப்படத்தில் சரண்யா பொன்வன்னன், சமுத்ரகனி, விவேக் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருப்பார்கள். இப்படம் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய அளவில் கொண்டாடப்பட்டு வெற்றி திரைப்படமாக அமைந்தது. சொல்லப்போனால் தனுஷ் திரைப்பயணத்தில் மிக முக்கியமான திரும்பு முனை அளித்த படமாக வேலையில்லா பட்டதாரி திரைப்படம் அவருக்கு அமைந்தது.

இப்படத்தில் தனுஷ் சிகரெட் பிடிக்கும் காட்சி புகையிலை பொருட்கள் விளம்பரப்படுத்துதல் தடை மற்றும் முறைப்படுத்துதல் சட்ட விதிகளை மீறி காட்சிகள் அமைக்கப்பட்டு உள்ளதாக குற்றசாட்டு எழுந்தது. திரையிலை புகையிலை எச்சரிக்கை எதிரான வாசகம் இடம் பெறாததால் தயாரிப்பு நிறுவனம் மற்றும் நடிகர் தனுஷ் ஆகியோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி கடந்த 2014 அன்று புகையிலை கட்டுப்படுக்கான மக்கள் அமைப்பின் சார்பில் தமிழக அரசிடம் புகார் அளிக்கப் பட்டது.  அதன்படி தயாரிப்பாளர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் தனுஷுக்கு எதிராக புகார் தொடர்ந்தது.

சைதாபேட்டை நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த இந்த புகார் மீதான விசாரணைக்கு தடை விதிக்க கோரி தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து தனுஷ் தரப்பின் வாதத்தில் படத்திற்கு தணிக்கை வாரியம் சான்று அளித்துள்ளதாகவும் புகார் கொடுப்பதற்கு முன்பு விளக்கம் தர வாய்பை வழங்கவில்லை என்றும் இது குறித்து எழுந்த வழக்கை தள்ளுல்படி செய்ய வேண்டும் என்றும் வாதிட்டனர்.

அதன்பின்னர் பதிவான வழக்கை ரத்து செய்யக் கோரும் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவின் மனுக்களை ஏற்க கூடாது என்றும், அவற்றை தள்ளுபடி செய்ய வேண்டுமென்றும் தமிழ்நாடு புகையிலை கட்டுப்பாடுக்கான மக்கள் அமைப்பின் சார்பில் தொடர்ந்து வாதிட்டனர். அதன் பின் வழக்கு விசாரணையில்  தனுஷ், தயாரிப்பாளர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆகியோருக்கு எதிராக சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக வெளியான செய்தி தற்போது தனுஷ் ரசிகர்களால் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

பன்னாட்டு திரைப்பட மேடையில் உதயநிதி ஸ்டாலின், தமன்னா.. - விருதுகளை அள்ளிய 'கண்ணே கலைமானே’ திரைப்படம்..!
சினிமா

பன்னாட்டு திரைப்பட மேடையில் உதயநிதி ஸ்டாலின், தமன்னா.. - விருதுகளை அள்ளிய 'கண்ணே கலைமானே’ திரைப்படம்..!

“நான் வில்லனா முன்னாடி வந்து நின்னா..” ஆக்ஷனில் அதகளப்படுத்தும் ‘கிங் கான்’ ஷாருக் கான்.. – அட்லியின் ‘ஜவான்’ பட சிறப்பு முன்னோட்டம் இதோ..
சினிமா

“நான் வில்லனா முன்னாடி வந்து நின்னா..” ஆக்ஷனில் அதகளப்படுத்தும் ‘கிங் கான்’ ஷாருக் கான்.. – அட்லியின் ‘ஜவான்’ பட சிறப்பு முன்னோட்டம் இதோ..

யுவன் ஷங்கர் ராஜா குரலில் ஜிவி பிரகாஷ் குமார்..  ‘அடியே’ படத்தின் அட்டகாசமான இரண்டாவது பாடல் உள்ளே..
சினிமா

யுவன் ஷங்கர் ராஜா குரலில் ஜிவி பிரகாஷ் குமார்.. ‘அடியே’ படத்தின் அட்டகாசமான இரண்டாவது பாடல் உள்ளே..