பிரபல சின்னத்திரை நடிகர்கள் வீட்டில் கைவரிசை காட்டிய திருடன்.. அடுத்தடுத்து ஏற்பட்ட சம்பவத்தால் பரபரப்பு... விவரம் உள்ளே..

பிரபல நடிகர்கள் லதா ராவ் ராஜ் கமல் வீட்டில் திருடர்கள் கைவரிசை விவரம் உள்ளே - Robbery at  tv serial couple raj kamal latha rao house | Galatta

தமிழ் தொலைகாட்சி தொடர்களிலும் திரைப்படங்களிலும் நடித்து ரசிகர்களிடையே பரிச்சியமான முகமாக வளர்ந்து நிற்கும் சின்னத்திரை பிரபலம் நடிகர் ராஜ் கமல் மற்றும் அவரது மனைவியும் நடிகையுமான லதா ராவ். இயக்குனர் இமயம் கே பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த சிந்து பைரவி படத்தின் தொடர்ச்சியான சீரியல் சஹானா தொடரின் மூலம் பிரபலமடைந்தவர் நடிகர் ராஜ் கமல். தொடர்ந்து பல்வேறு தொடர்களின் மூலம் ரசிகர்களின் வரவேற்பை பெற்று தொலைக்காட்சி பிரபலமான இவர் தமிழ் திரைப்படங்களிலும் சரோஜா, லிங்கா, நவீன சரஸ்வதி சபதம், கசட தபற போன்ற சில சில படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் சன் தொலைக்காட்சியில் ஆனந்த ராகம் என்ற தொடரில் நடித்து வருகிறார்.

இவரது மனைவியும் நடிகையுமான லதா ராவும் தமிழ் தொலைகாட்சியில் பல தொடர்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானவர். மேலும் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

பிஸியாக திரைப்படங்களிலும் தமிழ் சீரியல்களிலும் நடித்து வரும் ராஜ் கமல் – லதா தம்பதியினர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாக சென்னை மதுரவாயில் பகுதியில் ஒரு வீட்டை  கட்டி அதனை சினிமா மற்றும் சீரியல் படப்பிடிப்பிற்கு வாடகை விட்டு வருகின்றனர். படப்பிடிப்பிற்கு என்பதால் வீட்டிற்கு அதிநவீன கருவிகள், நேர்த்தியான கலை அலங்கார பொருட்கள் என பார்த்து பார்த்து வடிவமைத்துள்ளனார்.

இந்நிலையில் ராஜ் கமல் – லதா ராவ் வீட்டில் சமீபத்தில் மர்ம நபர் கைவரிசை காட்டியுள்ளார். வீட்டில் உள்ள பொருட்கள் காணாமல் போனதை அறிந்து அந்த வீட்டின் பணியாளர் ராஜ் கமல் – லதா தம்பதியினருக்கு தகவல் பகிர, இதையடுத்து மதுரவாயல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். விசாரணையில் வீட்டின் பின் பக்க கதவை உடைத்து கொள்ளையர்கள் திருட வந்துள்ளதாகவும் வீட்டில் உயர்ந்த விலையில் உள்ள டிவி உட்பட சில பொருட்கள் திருடு பொய் உள்ளது தெரிய வந்துள்ளது.

இந்த புகாரின் அடிப்படையில் மதுரவாயல் காவல் துறையினர் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் அதே நேரத்தில் ராஜ் கமல் லதா ராவ் வீடு இருக்கும் தெருவில் உள்ள பாஜக பிரமுகர் வீட்டிலும் திருடு போய் உள்ளது.  இந்த நிகழ்வு அப்பகுதி மக்களிடையே பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து போலிஸ் இந்த புகாரை தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

 

 

 

யுவன் ஷங்கர் ராஜா குரலில் ஜிவி பிரகாஷ் குமார்..  ‘அடியே’ படத்தின் அட்டகாசமான இரண்டாவது பாடல் உள்ளே..
சினிமா

யுவன் ஷங்கர் ராஜா குரலில் ஜிவி பிரகாஷ் குமார்.. ‘அடியே’ படத்தின் அட்டகாசமான இரண்டாவது பாடல் உள்ளே..

கால் உடைந்து சிகிச்சை பெற்று வரும் நிலையில் அஜித் பட நடிகர்.! அதிர்ச்சியில் ரசிகர்கள்..
சினிமா

கால் உடைந்து சிகிச்சை பெற்று வரும் நிலையில் அஜித் பட நடிகர்.! அதிர்ச்சியில் ரசிகர்கள்..

Vibe குறையாத ‘ஜெயிலர்’ காவாலா பாடல்.. இணையத்தை கலக்கும் தமன்னாவின் ரீல்ஸ்.. வைரல் வீடியோ உள்ளே..
சினிமா

Vibe குறையாத ‘ஜெயிலர்’ காவாலா பாடல்.. இணையத்தை கலக்கும் தமன்னாவின் ரீல்ஸ்.. வைரல் வீடியோ உள்ளே..