ஆக்ஷன் காட்சிகளை அள்ளி வழங்கியிருக்கும் அட்லி.. – ஷாருக் கானின் ‘ஜவான்’ சிறப்பு முன்னோட்டத்தில் சுவாரஸ்யம் கூட்டும் 6 சிறந்த தருணங்கள்..

ஆவலை கூட்டும் ஜவான் பட முன்னோட்டம் சிறந்த 6 தருணங்கள் உள்ளே - Six Top moments in Shah rukh khan atlee Jawan prevue | Galatta

ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் போன்ற பிளாக் பஸ்டர் ஹிட்டுகளை தொடர்ந்து இயக்குனர் அட்லி முதல் முறையாக பாலிவுட்டில் களமிறங்கும் திரைப்படம்  ‘ஜவான்’. அதிரடி ஆக்ஷன் காட்சிகளுடன் அட்டகாசமான திரைக்கதையில் உருவாகும் ஜவான் படத்தின் ஷாருக் கான் கதாநாயகனாக நடிக்க படத்தின் கதாநாயகியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கவுள்ளார். மேலும் இவர்களுடன் மிரட்டலான வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்கிறார். மேலும் படத்தில் பிரியா மணி, யோகி பாபு, . சானிய மல்ஹோத்ரா ஆகியோர் நடிக்கின்றனர். படத்தில் சிறப்பு தோற்றத்தில் தீபிகா படுகோனே நடிக்கவுள்ளார். ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் GK விஷ்ணு ஒளிப்பதிவு செய்ய ரூபன் படத்திற்கு படதொகுப்பு செய்கிறார். மேலும் ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கின்றார். இந்தி ரசிகர்களிடம் மட்டுமல்லாமல் தென்னிந்திய ரசிகர்களிடமும் தனி எதிர்ப்பார்ப்பை கொண்டுள்ள ஜவான் திரைப்படம் வரும் செப்டம்பர் மாதம் 7 ம் தேதி இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பான் இந்திய திரைப்படமாக உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இந்நிலையில் ஜவான் படத்தின் Prevue என்று சொல்லப்படும் சிறப்பு முன்னோட்டத்தை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது.

ஆக்ஷன் நிறைந்த காட்சிகளுடன் வெளியான ஜவான் பட சிறப்பு முன்னோட்டம் தற்போது நாடு முழுவதும் ரசிகர்களால் அதிகம் கவரப்பட்டு வைரலாகி வருகிறது. இந்நிலையில் ஜவான் சிறப்பு முன்னோட்டத்தில் ரசிகர்கள் அதிகம் இணையத்தில் பேசு பொருளாக மாற்றி வரும் சிறப்பு தருணங்கள் குறித்து விளக்குகிறது இந்த சிறப்பு கட்டுரை..

பல பரிமாண தோற்றத்தில் ஷாருக் கான்

பல தசாப்தங்களாக ரசிகர்களின் மனம் கவர்ந்த ஷாருக் கான் அவரது சாக்லேட் பாய் தோற்றம் உட்பட இந்த படத்தில் மேலும் சில சிறப்பு தோற்றம் இடம் பெற்றுள்ளது. அதில் அந்நியன் பட பாணியில் அரை முகத்தில் மேக்கப்புடன் ஒரு தோற்றம், மொட்டையடித்து மெட்ரோ ரயிலில் அதகளம் படுத்தும் ஒரு தோற்றம் என பல பரிமாணங்களில் ஷாருக் கான் நடித்துள்ளார். மேலும் போலீஸ் அதிகாரி போன்ற தோற்றமும் இதில் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

robbery at popular tv serial couple raj kamal latha rao maduravayal house

மிரட்டலான வில்லன் விஜய் சேதுபதி

பவானி, சந்தானம் கதாபாத்திரங்களை தொடர்ந்து உச்ச நடிகர்களின் படங்களில் வில்லனாக நடிக்கும் விஜய் சேதுபதி ஜவான் படத்தில் ஷாருக் கானிற்கு வில்லனாக நடித்துள்ளார். எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் கூடுதல் சிறப்புடன் நடித்து கொடுக்கும் விஜய் சேதுபதி ஜவான் பட முன்னோத்திலும் கவர்ந்துள்ளார்.

robbery at popular tv serial couple raj kamal latha rao maduravayal house

தீபிகா படுகோனே

பதான் திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் ஷாருக் கான் படத்தில் சிறப்பு தோற்றத்தில் தீபிகா படுகோனே. ஆக்ஷன் காட்சிகளில் அசர வைத்த தீபிகா படுகோனேவிற்கு  இந்த படத்திலும் பக்காவான ஆக்ஷன் காட்சி உள்ளது. திருமண கோலத்தில் குஸ்தி சண்டையிடும் காட்சி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. வழக்கமான அட்லி திரைப்படங்களில் வரும் திருப்புமுனை பிளாஷ் பேக்களில் ஒன்றாக இது இருக்கும் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

robbery at popular tv serial couple raj kamal latha rao maduravayal house

லேடி சூப்பர் ஸ்டார்

தென்னிந்திய ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகை நயன்தாரா முதல் முறையாக பாலிவுட்டில் களமிறங்கும் ஜவான் படத்தில் அதிரடி காவல் துறை அதிகாரியாக வருகிறார். துப்பாக்கி கொண்டு ஆக்ஷனில் மிரட்டியிருக்கிறார் நயன்தாரா. தற்போது நயன்தாரா வரும் காட்சிகளை ரசிகர்கள் இணையத்தில் பகிர்ந்து வைரலாக்கி வருகின்றனர்.

robbery at popular tv serial couple raj kamal latha rao maduravayal house

அனிருத்

ஸ்டார்களுக்கு பாரபாட்சம் பார்க்கமால் நேர்த்தியான இசையை கொடுத்து ரசிகர்களை சமீபத்தில் வெகுவாக கவர்ந்து வரும் அனிருத் பின்னணி இசை இந்த சிறப்பு முன்னோட்டத்தில் அதிகம் பேசப்படுகிறது, நிச்சயம் படத்திலும் பல மாஸ் தருணங்களுக்கு அனிருத் இசை கூடுதல் சுவாரஸ்யம் கொடுத்திருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

robbery at popular tv serial couple raj kamal latha rao maduravayal house

மெட்ரோ

மெட்ரோ ரயிலை கடத்தும் ஷாருக் கான் பெண் குழுவினர். நிச்சயம் நிறைய கமர்ஷியல் விஷயங்களுடன் இந்த காட்சிகள் முழுவதும் ரசிகர்களால் பேசப்படும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

robbery at popular tv serial couple raj kamal latha rao maduravayal house

“நான் வில்லனா முன்னாடி வந்து நின்னா..” ஆக்ஷனில் அதகளப்படுத்தும் ‘கிங் கான்’ ஷாருக் கான்.. – அட்லியின் ‘ஜவான்’ பட சிறப்பு முன்னோட்டம் இதோ..
சினிமா

“நான் வில்லனா முன்னாடி வந்து நின்னா..” ஆக்ஷனில் அதகளப்படுத்தும் ‘கிங் கான்’ ஷாருக் கான்.. – அட்லியின் ‘ஜவான்’ பட சிறப்பு முன்னோட்டம் இதோ..

யுவன் ஷங்கர் ராஜா குரலில் ஜிவி பிரகாஷ் குமார்..  ‘அடியே’ படத்தின் அட்டகாசமான இரண்டாவது பாடல் உள்ளே..
சினிமா

யுவன் ஷங்கர் ராஜா குரலில் ஜிவி பிரகாஷ் குமார்.. ‘அடியே’ படத்தின் அட்டகாசமான இரண்டாவது பாடல் உள்ளே..

கால் உடைந்து சிகிச்சை பெற்று வரும் நிலையில் அஜித் பட நடிகர்.! அதிர்ச்சியில் ரசிகர்கள்..
சினிமா

கால் உடைந்து சிகிச்சை பெற்று வரும் நிலையில் அஜித் பட நடிகர்.! அதிர்ச்சியில் ரசிகர்கள்..