“நான் வில்லனா முன்னாடி வந்து நின்னா..” ஆக்ஷனில் அதகளப்படுத்தும் ‘கிங் கான்’ ஷாருக் கான்.. – அட்லியின் ‘ஜவான்’ பட சிறப்பு முன்னோட்டம் இதோ..

அதிரடியாக வெளியான ஷாருக் கானின் ஜவான் பட சிறப்பு முன்னோட்டம் வீடியோ வைரல்  - Most awaited Shah rukh khan Atlee jawan Movie Prevue out now | Galatta

பாலிவுட் ரசிகர்கள் மட்டுமல்லாமல் ஒட்டு மொத்த இந்திய ரசிகர்களாலும் கவரப்பட்டு பல தசாப்தங்களாக திரையுலகின் அசைக்க முடியாத ஜாம்பானாக இருப்பவர் நடிகர் ஷாருக் கான். தனித்துவமான உடல் மொழி, எளிதில் கவரும் ஸ்டைல் என்று படத்திற்கு படம் ரசிகர்களின் ஆரவார வரவேற்பை பெற்று பாலிவுட்டில் நம்பர் ஒன் ஸ்டாராக இருக்கும் ஷாருக் கான் நடிப்பில் இந்த ஆண்டு வெளிவந்த ‘பதான்’ திரைப்படம் உலகளவில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய ஹிட்டை கொடுத்தது. சொல்லப்போனால் வீழ்ச்சியில் இருந்த பாலிவுட் திரையுலகை பழைய மார்கெட்டிற்கு கொண்டு வந்த பெறுமை ஷாருக் கானால் தான் என்று திரையுலகினர் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதன்படி ஷாருக் கானின் அடுத்தடுத்த படங்கள் மீதான எதிர்பார்ப்பு இன்னும் மேலோங்கி உள்ளது. தற்போது ஷாருக் கான் இயக்குனர் ராஜ் குமார் ஹிரானியுடன் கூட்டணி அமைத்து ‘டன்க்கி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். அதை தொடர்ந்து சல்மான் கான் நடித்து வரும் ‘டைகர் 3’ படத்தில் சிறப்பு தோற்றத்தில் ஜவான் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் ஷாருக் கான்.

இதனிடையே ஷாருக் கான் நடிப்பில் வெளியாகவுள்ள திரைப்படம் ‘ஜவான்’. தமிழ் திரையுலகில் அடுத்தடுத்த பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டுகளை கொடுத்து முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருக்கும் இயக்குனர் அட்லி முதல் முறையாக பாலிவுட் பக்கம் திரும்பி ஷாருக் கானை இயக்கியுள்ளார்.  அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக உருவாகவுள்ள இப்படத்தில் ஷாருக் கான் ஹீரோவாக நடிக்க அவருடன் படத்தில் கதாநாயகியாக தென்னிந்திய லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கவுள்ளார். மேலும் மிரட்டலான வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்கின்றார். இவர்களுடன் பிரியா மணி, சானியா மல்ஹோத்ரா, யோகிபாபு ஆகியோர் இப்படத்தில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர்.  சிறப்பு தோற்றத்தில் தீபிகா படுகோனே நடிக்கவுள்ளார். மற்றும் மேலும் கூடுதல் சிறப்பாக தளபதி விஜய் இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளார் என்ற தகவலும் வெளியகியுள்ளது.

ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் GK விஷ்ணு ஒளிப்பதிவு செய்ய ரூபன் படத்திற்கு படதொகுப்பு செய்கிறார். மேலும் ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கின்றார். தமிழில் படத்திற்கு திரைக்கதை மற்றும் வசனம் இயக்குனர் அட்லியுடன் இணைந்து எஸ் ராமகிரிவாசன் எழுதியுள்ளார்.  இந்த படத்தின் மூலம் இயக்குனர் அட்லி, நயன்தாரா, ஒளிப்பதிவாளர் விஷ்ணு, படத்தொகுப்பாளர் ரூபன் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் உள்ளிட்டோருக்கு பாலிவுட்டில் இது முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தி ரசிகர்களிடம் மட்டுமல்லாமல் தென்னிந்திய ரசிகர்களிடமும் தனி எதிர்ப்பார்ப்பை கொண்டுள்ள ஜவான் திரைப்படத்தின் முன்னோட்டம் முன்னதாக வெளியாகி வைரலானது. அதை தொடர்ந்து தற்போது படத்தின் Prevue என்று சொல்லப்படும் சிறப்பு முன்னோட்டத்தை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது.

அதில், பல பில்டப் வசனங்களுடன் கிங் கான் அட்டகாசமான அதிரடியுடன் பல கெட்டப்களில் வருகிறார். மெட்ரோ கடத்தலை மையப்படுத்தி மிரட்டலான ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த திரைப்படமாக ஜவான் உருவாகியுள்ளது. தற்போது வெளியாகியுள்ள ஜவான் சிறப்பு முன்னோட்டம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது. நிச்சயம் திரைப்படம் அனைத்து ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் என்பது இந்த முன்னோட்டம் மூலம் தெரிய வருகிறது. தொடர்ந்து ஒட்டுமொத்த இந்தியா ரசிக்ர்களின் ஆவலை பெற்றிருக்கும் ஜவான் திரைப்படம் வரும் செப்டம்பர் மாதம் 7ம் தேதி இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பான் இந்திய திரைப்படமாக உலகமெங்கும் வெளியாகவுள்ளது.

 

 

Vibe குறையாத ‘ஜெயிலர்’ காவாலா பாடல்.. இணையத்தை கலக்கும் தமன்னாவின் ரீல்ஸ்.. வைரல் வீடியோ உள்ளே..
சினிமா

Vibe குறையாத ‘ஜெயிலர்’ காவாலா பாடல்.. இணையத்தை கலக்கும் தமன்னாவின் ரீல்ஸ்.. வைரல் வீடியோ உள்ளே..

“தனுஷ் சார் இதை எப்படி யோசிச்சுருப்பார்? “ ஜெயிலர் பாடலாசிரியர் அருண் ராஜா பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல் – Exclusive Interview உள்ளே..
சினிமா

“தனுஷ் சார் இதை எப்படி யோசிச்சுருப்பார்? “ ஜெயிலர் பாடலாசிரியர் அருண் ராஜா பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல் – Exclusive Interview உள்ளே..

மலேசியாவில் மாஸ் என்ட்ரி கொடுத்த ராக்கி பாய்.! ரசிகர்கள் படையுடன் யாஷ் வீடியோ இணையத்தில் வைரல்...
சினிமா

மலேசியாவில் மாஸ் என்ட்ரி கொடுத்த ராக்கி பாய்.! ரசிகர்கள் படையுடன் யாஷ் வீடியோ இணையத்தில் வைரல்...