தயாரிப்பாளராக அறிமுகமாகி பின்னர் ஹீரோவாக அவதரித்து அசத்தி வருபவர் உதயநிதி ஸ்டாலின்.அரசியல் குடும்பத்தில் பிறந்த இவர் அரசியலிலும் தனது முத்திரையை பதித்து 2021-ல் நடைபெற்ற தேர்தலில் சேப்பாக்கம் சட்டமன்ற தொகுதியில் வெற்றிபெற்று MLA-வாகவும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் நடிப்பில் கடைசியாக சைக்கோ படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.கடந்த சில வருடங்களாக அரசியலில் செம பிஸியாக இருந்தாலும் படங்களில் நடிப்பதையும் தொடர்ந்து செய்து வந்தார் உதயநிதி ஸ்டாலின்.இதனை தொடர்ந்து நெஞ்சுக்கு நீதி,கண்ணை நம்பாதே உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார் உதயநிதி ஸ்டாலின்.

இவர் அடுத்ததாக பரியேறும் பெருமாள்,கர்ணன் பட இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கும் மாமன்னன் படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். ரெட் ஜெயண்ட் மூவிஸ் இந்த படத்தினை தயாரிக்கின்றனர்.ஏ.ஆர் ரஹ்மான்இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.கீர்த்தி சுரேஷ் இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.

பஹத் ஃபாசில்,வைகைப்புயல் வடிவேலு இந்த படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.தற்போது இந்த படத்தின் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது என்றும் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விரைவில் முக்கிய நடிகர்களின் டேட் கிடைத்ததும் தொடங்கும் என்றும் படக்குழுவினர் தெரிவித்து சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளனர்.