"எந்த போதை பழக்கமும் இல்லை ஆனால் இந்த போதைப் பழக்கம் இருக்கிறது!"- மாரி செல்வராஜின் சுவாரஸ்யமான ஸ்பெஷல் பேட்டி இதோ!

இயக்குனராக இருப்பது பெரிய போதை எனக் கூறிய மாரி செல்வராஜ்,maamannan director mari selvaraj says direction is huge addiction for him | Galatta

உதயநிதி ஸ்டாலின் அவர்களின் திரைப்பயணத்திலேயே இதுவரை இல்லாத அளவிற்கு பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளிவந்த மாமன்னன் திரைப்படம் அவரது பயணத்திலேயே இதுவரை எந்த திரைப்படத்திற்கும் இல்லாத அளவிற்கு மிகப்பெரிய வசூல் சாதனைகளையும் பாக்ஸ் ஆபிஸில் படைத்து வருகிறது. இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வைகைப்புயல் வடிவேலு நடிக்கிறார் என்ற அறிவிப்பு வந்த சமயத்தில் இருந்து நாளுக்கு நாள் பெரும் ஆர்வத்தை தூண்டிய மாமன்னன் திரைப்படம் கடந்த ஜூன் 29 ஆம் தேதி ரிலீஸாகி ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பை பெற்றுள்ளது. தனது முந்தைய படைப்புகளான பரியேறும் பெருமாள் மற்றும் கர்ணன் ஆகிய திரைப்படங்களின் வரிசையில் மிகவும் அழுத்தமான அரசியல் படமாக முக்கியமான சமூக நீதியை தன் பாணியில் மாரி செல்வராஜ் பேசி இருக்கிறார். உதயநிதி ஸ்டாலின் மற்றும் வைகைப்புயல் வடிவேலு ஆகியோரோடு இணைந்து ஃபகத் ஃபாஸில் மற்றும் கீர்த்தி சுரேஷ் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் மாமன்னன் திரைப்படத்திற்கு மற்றொரு மிகப்பெரிய பலமாக அமைந்தது இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை.

இதனிடையே நமது கலாட்டா தமிழ் சேனலில் நடைபெற்ற சிறப்பு நேர்காணலில் இயக்குனரும் நடிகையுமான சுகாசினி மணிரத்தினம் அவர்களோடு உரையாடிய இயக்குனர் மாரி செல்வராஜ் தனது வாழ்க்கையிலும் திரை பயணத்திலும் நடந்த சுவாரஸ்யமான அனுபவங்களையும் தகவல்களையும் நம்மோடு பகிர்ந்து கொண்டார். அந்த வகையில் இயக்குனராக இருப்பது தனக்கு மிக பெரிய போதையாக இருப்பதாக  தெரிவித்திருக்கிறார். முன்னதாக இயக்குனர் ராம் அவர்களின் கற்றது தமிழ் திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்தது குறித்தும், சினிமாவில் நடிக்க ஆசை இருக்கிறதா என்ற கேள்வி குறித்தும் பதிலளித்த இயக்குனர் மாரி செல்வராஜ், இயக்குனரான பின்பு நடிப்பதற்கான ஆசை போய்விட்டதாக தெரிவித்தார். மேலும் “தற்போது நடிப்பின் மீது சுத்தமாகவே ஈடுபாடு இல்லை என மிகவும் உறுதியாக சொல்ல முடியும்” என பதிலளித்த இயக்குனர் மாரி செல்வராஜ் தொடர்ந்து பேசியபோது,

“அதற்குக் காரணம் இயக்குனராக இது ஒரு பயங்கரமான போதையாகிவிட்டது. மழை பெய்ய வேண்டும் என்று சொன்னால் மழை பெய்கிறது. வெயில் அடிக்க வேண்டும் என்று சொன்னால் வெயில் அடிக்கிறது . லைட்டை ஆஃப் செய்யுங்கள் என்று சொன்னால் லைட்டை ஆஃப் செய்கிறார்கள். வெளிச்சம் பரவட்டும் என சொன்னால் வெளிச்சம் பரவுகிறது. அது ஒரு போதை. அதற்குள் நம்ம உலகத்தின் , நம் மனதிற்குள் தோன்றக்கூடிய நியாயங்கள் மனிதர்களைப் பற்றி நாம் பேசுகிறோம். இது ஒரு பெரிய விஷயமாக இருக்கிறது. நம்மிடம் இவன் என்ன சொல்லப் போகிறான் நம்மிடம் என்ன கேட்கப் போகிறான் என காத்திருக்கிறார்கள் அல்லவா? அதற்கு நாம் போய் சொல்லி அவர்களது மனதிற்குள் ஊடுருவி போய் மீண்டும் வெளியில் வந்து, அந்த விளையாட்டு மிகவும் பயங்கரமாக இருக்கிறது. எனவே இயக்குனராக இருப்பது பெரிய போதை தான். எந்த போதை பழக்கமும் இல்லை, இந்த போதை பழக்கம் தான் இருக்கிறது." என பதிலளித்து இருக்கிறார். இயக்குனர் மாரி செல்வராஜின் அந்த சிறப்பு பேட்டியை கீழே உள்ள லிங்கில் காணலாம்.
 

சினிமா

"நல்ல டான்ஸரான்னு தெரியாது!"- நடனத்தின் மீதான ஆர்வம் குறித்து முதல் முறை மனம் திறந்த மாமன்னன் இயக்குனர் மாரி செல்வராஜ்! வைரல் வீடியோ

“பரியேரும் பெருமாள் படத்திற்கு முன்பு நான் யோசிச்சு வெச்ச கதை இது..” மாரி செல்வராஜ் பகிர்ந்த ருசிகர தகவல் – Exclusive Interview உள்ளே..
சினிமா

“பரியேரும் பெருமாள் படத்திற்கு முன்பு நான் யோசிச்சு வெச்ச கதை இது..” மாரி செல்வராஜ் பகிர்ந்த ருசிகர தகவல் – Exclusive Interview உள்ளே..

“யோஹன் அத்யாயம் ஒன்று எப்போது..?” தளபதி விஜயுடன் கூட்டணி அமைப்பது குறித்து இயக்குனர் கௌதம் மேனன் பகிர்ந்து கொண்ட தகவல் – Exclusive interview உள்ளே..
சினிமா

“யோஹன் அத்யாயம் ஒன்று எப்போது..?” தளபதி விஜயுடன் கூட்டணி அமைப்பது குறித்து இயக்குனர் கௌதம் மேனன் பகிர்ந்து கொண்ட தகவல் – Exclusive interview உள்ளே..