“வெந்து தணிந்தது காடு உருவாக்க நான் அவ்ளோ விஷயம் பேசிருக்கேன்..” கௌதம் மேனன் பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல் – Exclusive Interview இதோ..

வெந்து தணிந்தது காடு படம் குறித்து கௌதம் மேனன் பகிர்ந்த தகவல் – Gautham menan about vendhu thanindhathu kadu movie | Galatta

கடந்த ஆண்டு ரசிகர்களின் ஆரவார கொண்டாட்டத்துடன் வெளியான திரைப்படம் ‘வெந்து தணிந்தது காடு’. இயக்குனர் கௌதம் மேனன் உடன் மூன்றாவது முறை கூட்டணி வைத்து நடிகர் சிம்பு வித்யாசமான கதாபாத்திரத்தில் நடித்த இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு படத்தின் அறிவிப்பிலிருந்தே இருந்து வந்தது.  வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல்ஸ் தயாரிப்பில் எழுத்தாளர் ஜெயமோகன் கதையில் உருவான இப்படத்தில் சிலம்பரசன் ஹீரோவாக நடிக்க இவருக்கு ஜோடியாக சித்தி இதானி நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் ராதிகா சரத் குமார், மலையாள நடிகர் நீரஜ் மாதவ் உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வெளியான இப்படத்திற்கு இசை புயல் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்திருப்பார்.

பக்கா ஆக்ஷன் காட்சிகளுடன் கேங்க்ஸ்டர் கதைகளத்தில் உருவான இப்படத்தினை ரசிகர்களை மிகுந்த வரவேற்பை கொடுத்து விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற வைத்தனர். இப்படத்தையடுத்து வெந்து தணிந்தது காடு 2 திரைப்படம் உருவாகவுள்ளது.

ரசிகர்களின் வரவேற்பை பெற்று கடந்த ஆண்டின் குறிப்பிடப்படும் படங்களில் முக்கிய படமாக வெந்து தணிந்தது காடு திரைப்படம் அமைந்தது. இந்நிலையில் இப்படம் குறித்து நமது கலாட்டா தமிழ் சிறப்பு பேட்டியில் பிரபல இயக்குனர் கௌதம் மேனன் அவர்கள் பகிர்ந்து கொண்ட சுவாரஸ்யமான தகவல்,

“வெந்து தணிந்நது காடு படம் ரிலீஸ் ஆகும் போது நாங்க எதிர்பார்த்தது ஒரு நகரம் சார்ந்த கதை களம் தான் நீங்க இந்த மாதிரி படம் பண்ணிருக்கீங்க.. எப்படி சார் கஷ்டமா இருந்துச்சா? னு கேட்டாங்க. அது என் வேலை எப்படி இருந்தாலுப் செஞ்சு தான் ஆகனும்..  அதை உருவாக்க நான் அவ்ளோ பேசிருக்கேன். நிறைய இடத்துக்கு போயிருக்கேன்..  நான் பார்த்த ஒரு பரோட்டா கடை தான் இந்த படத்தில் செட் போட்டேன். பரோட்டா கடை இப்படி இருக்குமா னு விமர்சனம் வந்தது.  நான் பார்த்த ஒரு இடம் அங்க படம் எடுக்கலாம்னு  நினைச்சேன். ஆனா அதை சுத்தம் படுத்த நேரம் எடுக்கும் சிம்புக்கு சௌகரியமா இருக்காது னு அதே அளவுல அப்படியே ஒரு செட் போட்டோம். சினிமாங்கறது ஒரு விஷயத்தை உருவாக்குறது தானே. அதன்படிதான் அந்த செட் உருவாச்சு.. அது என் பார்வை. அதுவே விமர்சனம் வந்துச்சு.. நகரம் சார்ந்த கதை, காதல் கதைதான் எதிர்பார்க்குறாங்க னா நான் யோசிக்கனும் அது போல கதை வேண்டும். “ என்றார்

மேலும் தொடர்ந்து பேசிய அவர், “அந்த நேரத்துல நான் ஜெயமோகன் சார் கிட்ட கேட்டப்போ ஒரு வெப்பன் சார்ந்து கதை வேண்டும் என்று கேட்க அவர் இந்த கதை கொடுத்தார். புது ஹீரோ வெச்சு படம் பண்ணனும் னு சொன்னார். நான் அந்த தடையை மீறி சிம்புவை கொண்டு வந்தேன். ரஹ்மான் சார் முதல் முதலில் பாடலே கொடுக்கல. திரும்பவும் பாடல் உருவாக்குனோம்‌. நிறைய பண்ணோம் அந்த படத்திற்காக.. அந்த படம் 20% மக்களுக்கு தான் போய் சேர்ந்தது னு நினைக்கிறேன். அந்த படம் மிகப்பெரிய பிளாக் பஸ்டர் ஹிட் லாம் இல்ல..  ஆனா தயாரிப்பாளர் எந்த பணமும் நஷ்டமாகல..  20 லருந்து 25 கோடிக்கிட்ட லாபம் வந்துருக்கும்.." என்றார் கௌதம் மேனன்.

மேலும் இயக்குனர் கௌதம் மேனன் அவரது திரைப்பயணம் குறித்து நமது கலாட்டா தமிழ் சிறப்பு பேட்டியில் பகிர்ந்து கொண்ட பல சுவாரஸ்யமான தகவல் கொண்ட வீடியோ இதோ..4

“யோஹன் அத்யாயம் ஒன்று எப்போது..?” தளபதி விஜயுடன் கூட்டணி அமைப்பது குறித்து இயக்குனர் கௌதம் மேனன் பகிர்ந்து கொண்ட தகவல் – Exclusive interview உள்ளே..
சினிமா

“யோஹன் அத்யாயம் ஒன்று எப்போது..?” தளபதி விஜயுடன் கூட்டணி அமைப்பது குறித்து இயக்குனர் கௌதம் மேனன் பகிர்ந்து கொண்ட தகவல் – Exclusive interview உள்ளே..

முதல் முறையாக குழந்தையின் புகைப்படத்தை பகிர்ந்த சரவணன் மீனாட்சி ஜோடி.!  வாழ்த்துகளுடன் வைரலாகும் க்யூட் புகைப்படம் உள்ளே..
சினிமா

முதல் முறையாக குழந்தையின் புகைப்படத்தை பகிர்ந்த சரவணன் மீனாட்சி ஜோடி.! வாழ்த்துகளுடன் வைரலாகும் க்யூட் புகைப்படம் உள்ளே..

புஷ்பா 2 படத்திற்கு பின் அல்லு அர்ஜுன் உடன் 4வது முறை இணையும் பிளாக்பஸ்டர் இயக்குனர்... புது பட மாஸான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
சினிமா

புஷ்பா 2 படத்திற்கு பின் அல்லு அர்ஜுன் உடன் 4வது முறை இணையும் பிளாக்பஸ்டர் இயக்குனர்... புது பட மாஸான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!