“யோஹன் அத்யாயம் ஒன்று எப்போது..?” தளபதி விஜயுடன் கூட்டணி அமைப்பது குறித்து இயக்குனர் கௌதம் மேனன் பகிர்ந்து கொண்ட தகவல் – Exclusive interview உள்ளே..

தளபதி விஜயுடன் கூட்டணி குறித்து இயக்குனர் கௌதம் மேனன் வீடியோ உள்ளே - Director gautham menon about thalapathy vijay team up | Galatta

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் கௌதம் வாசுதேவ் மேனன். மின்னலே படத்தின் மூலம் தன் திரைப்பயணத்தை தொடங்கிய இயக்குனர் கௌதம் மேனன் தொடர்ந்து பல ஹிட் திரைப்படங்களை இயக்கி அஜித், சூர்யா, விக்ரம், தனுஷ், சிம்பு போன்ற முன்னணி நட்சத்திரங்களின் படங்களை இயக்கி தற்போது தென்னிந்தியாவின் முன்னணி இயக்குனராக வலம் வருகிறார். இவர் இயக்கத்தில் கடந்த ஆண்டு சிலம்பரசன் நடிப்பில் வெளியான ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படம் ரசிகர்களின் ஆதரவை பெற்று வெற்றி திரைப்படமாக அமைந்தது. அதையடுத்து சியான் விக்ரம் கூட்டணியில் நீண்ட நாள் முன்னதாக இயக்கிய ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் ரிலீஸ் க்கான இறுதிகட்ட வேலைகளில் தீவிரமாக இறங்கியுள்ளார். அதையடுத்து ‘வெந்து தணிந்தது காடு 2’ படத்திற்கான வேலையிலும் இருக்கிறார். இயக்குனராகவும் தயாரிப்பாளராக மட்டுமல்லாமல் நடிகராகவும் தற்போது இயக்குனர் கௌதம் மேனன் பல படங்களில் நடித்து வருகிறார். அதன்படி இந்த ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை படத்திலும் சிலம்பரசன் நடிப்பில் வெளியான பத்து தல படத்திலும் நடித்து கவனம் ஈர்த்தார். அதை தொடர்ந்துகௌதம் மேனன் தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் ‘லியோ’ படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நமது கலாட்டா தமிழ் சிறப்பு பேட்டியில் இயக்குனர் கௌதம் மேனன் கலந்து கொண்டு லியோ படம் குறித்து தளபதி விஜயுடன் பணியாற்றும் அனுபவம் குறித்தும் பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். அதில் லியோ படத்திற்கு பின் தளபதி விஜயுடன் கூட்டணி அமையுமா? என்ற கேள்விக்கு, “லியோ படப்பிடிப்பு தளத்திற்கு நான் ஒரு நடிகனாதான் போனேன். லோகேஷ் க்கும் எனக்கும் ஒரு புரிதல் இருந்நது. ‘விக்ரம்’ படத்தில் என்னை நடிக்க சொல்லி கேட்டார்.  அப்போது என்னால் அதை பண்ண முடியாம போயிடுச்சு..  லியோ கமிட் ஆனதும் எனக்குதான் முதல்ல சொன்னார். லியோ படப்பிடிப்பில் அங்க ஒரு நடிகராதான் நான் போனேன். அங்க விஜய் சார்கிட்ட கதை சொல்றது நான் பண்ணல.‌. பண்ணவும் கூடாது.  ஆனா எனக்கு அவரோட படம் பண்ணனும் னு ஆசை இருக்கு..” என்றார் இயக்குனரும் நடிகருமான கௌதம் மேனன்.  

அதை தொடர்ந்து தளபதி விஜயுடன் ஏற்கனவே கூட்டணி அமைத்து இயக்க முடியாமல் போன ‘யோஹன் அத்தியாயம் ஒன்று’ படம் குறித்து கேட்கையில், “அந்த படம் எதுவும் நிறுத்தப்படல.. அந்த படம் இருக்கு.. யோஹன் ல இருந்த இரண்டு மூன்று விஷயம் நான் துருவ நட்சத்திரத்தில வைத்திருக்கேன். ஆனா அந்த படத்தோட கதை எதோ ஒரு காலத்துல பண்ணிடுவேன்." என்றார் இயக்குனர் கௌதம் மேனன்.

யோஹன் அத்யாயம் ஒன்று 2013 ல் காலகட்டத்தில் துவங்கப்பட இருந்த திரைப்படம். இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கவிருந்த இப்படம் சில காரங்களினால் படப்பிடிப்பு துவன்காமலே பாதியில் நின்றது. ஏ ஆர் ரஹ்மான் இசையில் உருவாகவிருந்த இப்பாத்தினை கௌதம் மேனன் ஃபோட்டான் கதாஸ் நிறுவனம்,எரோஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் ஃபுயுசர் ப்ரோடக்ஷ்ன் யூகே ஆகிய மூன்று தயாரிப்பு நிறுவனங்களும் இணைந்து தயாரிக்கவிருந்தது. முன்னதாக இப்படம் குறித்து வெளியான போஸ்டர் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டது குறிப்பிடதக்கது 

 

கோலாகலமாக நடைபெற்ற ராம் சரண், உபாசனா தம்பதியினர் குழந்தையின் பெயர் சூட்டும் விழா.. - இணையத்தில் வைரலாகும் அழகான பெயர்..!
சினிமா

கோலாகலமாக நடைபெற்ற ராம் சரண், உபாசனா தம்பதியினர் குழந்தையின் பெயர் சூட்டும் விழா.. - இணையத்தில் வைரலாகும் அழகான பெயர்..!

“நான் மகிழ்ச்சி அடைகிறேன்..” விஜய் மக்கள் இயக்கத்தினருக்கு தளபதி எழுதிய கடிதம்..!
சினிமா

“நான் மகிழ்ச்சி அடைகிறேன்..” விஜய் மக்கள் இயக்கத்தினருக்கு தளபதி எழுதிய கடிதம்..!

“அந்த வீடு செய்ய ரொம்ப கஷ்டபட்டோம்” மாமன்னன் படத்தின் கலை இயக்குனர் பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல்.. – முழு நேர்காணல் உள்ளே..
சினிமா

“அந்த வீடு செய்ய ரொம்ப கஷ்டபட்டோம்” மாமன்னன் படத்தின் கலை இயக்குனர் பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல்.. – முழு நேர்காணல் உள்ளே..