பண்டிகை வெளியீடாக வரும் விஷால் - SJசூர்யாவின் ஆக்சன் என்டர்டெய்னர் மார்க் ஆண்டனி... அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு இதோ

விஷால் - SJசூர்யாவின் மார்க் ஆண்டனி ரிலீஸ் தேதி அறிவிப்பு,vishal sj suryah in mark antony movie release date announcement | Galatta

விஷால் - எஸ்.ஜே.சூர்யா காம்பினேஷனில் கலக்கலான  ஆக்சன் என்டர்டைன்ராக வெளிவர இருக்கும் மார்க் ஆண்டனி திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டது. தமிழ் சினிமாவின் அதிரடி ஆக்ஷன் கதாநாயகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் விஷால் நடிப்பில் கடைசியாக வெளிவந்த லத்தி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்ததாக தனது திரைப் பயணத்தில் 34வது படமாக இயக்குனர் ஹரி இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் விஷால் கதாநாயகனாக நடிக்கிறார். ஏற்கனவே விஷால் - ஹரி கூட்டணியில் வெளிவந்த தாமிரபரணி & பூஜை ஆகிய திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில், அடுத்த வெற்றி படமாக ஹட்ரிக் ஹிட் கொடுக்கும் வகையில் மீண்டும் இந்த கூட்டணி இணைந்து இருப்பதால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர். இதனைத் தொடர்ந்து இயக்குனராக அவதாரம் எடுத்துள்ள நடிகர் விஷால் துப்பறிவாளன் 2 திரைப்படத்தை இயக்கி நடிக்க இருக்கிறார். விரைவில் துப்பறிவாளன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு லண்டனில் தொடங்கும் என தெரிகிறது.

அதே போல் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த பொம்மை திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் கதாநாயகனாக நடிக்கும் இந்தியன் 2 மற்றும் தெலுங்கில் ராம்சரண் கதாநாயகனாக நடித்துவரும் கேம் சேஞ்சர் உள்ளிட்ட படங்களில் எஸ்.ஜே.சூர்யா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த வரிசையில் நடிகர்கள் விஷால் மற்றும் SJசூர்யா இணைந்து மிரட்டலான முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் திரைப்படம் தான் மார்க் ஆண்டனி இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள மார்க் ஆண்டனி திரைப்படத்தில் ரிது வர்மா, இயக்குனர் செல்வராகவன், புஷ்பா படத்தில் மிரட்டலாக நடித்த பிரபல தெலுங்கு நடிகர் சுனில், நிழல்கள் ரவி, Y.gee.மகேந்திரன், ரெட்டின் கிங்ஸ்லி, அபிநயா மற்றும் மலேசிய நடிகர் DSG உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

மினி ஸ்டுடியோ சார்பில் தயாரிப்பாளர் வினோத்குமார் தயாரித்துள்ள சுவாரசியமான டைம் டிராவல் கான்செப்ட்டை கொண்டு 1960 காலகட்டத்தை கதைக்களமாக கொண்ட வித்தியாசமான கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாகி இருக்கும் இந்த மார்க் ஆண்டனி திரைப்படத்திற்கு அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவில், விஜய் வேலுக்குட்டி படத்தொகுப்பு செய்ய ஜீவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். சமீபத்தில் வெளிவந்த மார்க் ஆண்டனி திரைப்படத்தின் டீசர் மிகப்பெரிய கவனத்தை ஈர்த்தது. அதற்குக் காரணம் விஷால் மற்றும் SJசூர்யா இருவரும் இந்த டைம் டிராவலில் பலவிதமான காலகட்டங்களில் பல வெவ்வேறு அட்டகாசமான கெட்டப்புகளில் இருக்கும் காட்சிகளும் வசனங்களும் ரசிகர்களை கவர்ந்தன.  

இந்த நிலையில் தற்போது மார்க் ஆண்டனி திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்புக்கு முன்னதாக தங்களது ட்விட்டர் பக்கங்களில், நடிகர் விஷால், கில்லி படத்தில் இடம்பெற்ற கணேஷண்ணா கர்ணம் போடு என்ற பாடல் வரியை பதிவிட, நடிகர் எஸ்.ஜே.சூர்யா, வான்மதி பட பிள்ளையார்பட்டி ஹீரோ நீ தான்ப்பா என்ற பாடல் வரியை பதிவு செய்தார். தொடர்ந்து இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன், வேதாளம் படத்தின் வீர விநாயக வெற்றி விநாயக என்ற பாடலின் வரியை பதிவு செய்தார். எனவே கட்டாயமாக விநாயகர் சதுர்த்தி வெளியீடாக மார்க் ஆண்டனி ரிலீசாக இருப்பதாக எதிர்பார்க்கப்பட்டது. அதனை அறிவிக்கும் வகையில் அதிரடியான புதிய போஸ்டரை வெளியிட்ட படக்குழு மார்க் ஆண்டனி திரைப்படம் விநாயகர் சதுர்த்தி வெளியீடாக ரிலீஸ் ஆகும் என்பதை தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். மிரட்டலான அந்த போஸ்டர் இதோ…
 

Ready mamae ready!! Nanae ellathayum Mathi marandhu mari vandhu iruken “HI FOLKS #MarkAntony on VinayagaChathurthi in theatres” 🥰👍👍👍💐💐💐 - @VishalKOfficial da mamae @adhikravi @vinod_offl @gvprakash @selvaraghavan @riturv@suneeltollywoodpic.twitter.com/z9Eb6slcUA

— S J Suryah (@iam_SJSuryah) July 4, 2023

'உதயநிதி ஸ்டாலின் படங்களிலேயே மாமன்னன் தான் உச்சம்!'- அதிரடி வசூல் சாதனை... விவரம் உள்ளே!
சினிமா

'உதயநிதி ஸ்டாலின் படங்களிலேயே மாமன்னன் தான் உச்சம்!'- அதிரடி வசூல் சாதனை... விவரம் உள்ளே!

வேட்டையன் ராஜா பராக் பராக்... ராகவா லாரன்ஸின் சந்திரமுகி 2 பட அட்டகாசமான புதிய அறிவிப்பு! ட்ரெண்டாகும் புகைப்படங்கள் இதோ
சினிமா

வேட்டையன் ராஜா பராக் பராக்... ராகவா லாரன்ஸின் சந்திரமுகி 2 பட அட்டகாசமான புதிய அறிவிப்பு! ட்ரெண்டாகும் புகைப்படங்கள் இதோ

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் பட முதல் பாடல் அறிவிப்பு… மீண்டும் 'நெருப்புடா' கூட்டணி! வேற லெவல் கலக்கல் ப்ரோமோ இதோ
சினிமா

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் பட முதல் பாடல் அறிவிப்பு… மீண்டும் 'நெருப்புடா' கூட்டணி! வேற லெவல் கலக்கல் ப்ரோமோ இதோ