“பரியேரும் பெருமாள் படத்திற்கு முன்பு நான் யோசிச்சு வெச்ச கதை இது..” மாரி செல்வராஜ் பகிர்ந்த ருசிகர தகவல் – Exclusive Interview உள்ளே..

மாரி செல்வராஜ் தன் திரைப்பயணம் குறித்து பகிர்ந்து கொண்ட வீடியோ - mari selvaraj about his film career struggle | Galatta

இயக்குனர் ராம் அவர்களின் உதவி இயக்குனராக பல படங்களில் பணியாற்றி பின் இயக்குனர் பா ரஞ்சித் தயாரிப்பில் ‘பரியேரும் பெருமாள்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் மாரி செல்வராஜ். முதல் படத்திலே அழுத்தமான கதையினாலும் அனைத்து தரப்பு ரசிகர்களாலும் ஏற்றுக் கொள்ளக்கூடிய திரைகதையினாலும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து தமிழ் சினிமாவின் கவனத்தை ஈர்த்தார். முதல் படத்தின் வெற்றியையடுத்து இரண்டாவது படத்தில் திரையுலகின் முன்னணி ஸ்டாரான தனுஷ் உடன் கூட்டணி அமைத்து ‘கர்ணன்’ திரைப்படத்தை இயக்கினார். முதல் படத்தை காட்டிலும் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்தது தனுஷின் கர்ணன் திரைப்படம்.

அதை தொடர்ந்து இயக்குனர் மாரி செல்வராஜ் ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில் தனது மூன்றாவது படமான ‘மாமன்னன்’ படத்தை இயக்கினார். உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, கீர்த்தி சுரேஷ், பகத் பாசில் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான மாமன்னன் திரைப்படம் கடந்த ஜூன் 29ம் தேதி உலகமெங்கும் வெளியாகி ரசிகர்களின் ஆரவார வரவேற்பினை பெற்று வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கின்றது. தொடர்ந்து திரைபிரபலங்கள், அரசியல் ஆளுமைகள், ரசிகர்களின் நேர்மறையான கருத்துகளை மாமன்னன் திரைப்படம் பெற்று வருகிறது.

இந்நிலையில் நமது கலாட்டா தமிழ் சிறப்பு பேட்டியில் இயக்குனர் மாரி செல்வராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாமன்னன் படம் குறித்தும் தனது திரைப்பயணம் குறித்தும் பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். அதில் தனது சட்டக்கல்லூரி படிப்பை விட்டு திரைத்துறைக்கு வந்த நிகழ்வு குறித்து பகிர்ந்து கொண்டார். அவர் பெசியதாவது,

"சட்டக்கல்லூரி எனக்கு ரொம்ப பிடிக்கும். நான் இந்த இடத்திற்கு வந்த பின்பும் நான் சட்ட படிப்பு முடிக்கல BA.BL மேல ஒரு கோடு அப்படியே இருக்குனு நினைச்சு வருத்தப்பட்டிருக்கேன்.  கனவோட சந்தோஷத்தோட தான் சட்டக்கல்லூரி  போனேன். ஆனா சட்டக்கல்லூரி கொடுத்த அனுபவம், சம்பவங்கள், நான் சந்தித்த மனிதர்கள் என்னை திசை திருப்ப ஆரம்பித்தது.  அதன் பின் நான் மனுஷங்கள படிக்க ஆரம்பித்தேன். எதிருக்கு முரணா பேசிட்டு இருந்தேன். நண்பர்களுக்கு தனி தனி பார்வை வரும். என்னை வேற மாதிரி யோசிக்க ஆரம்பித்தார்கள். நான் கல்லூரி புத்தகங்களை படிக்கும்போது என் மனது எங்கோ போச்சு.. வாழ்கையோட சுவராஸ்யத்தை தேடி போக ஆரம்பிச்சேன். அதனால் சட்டக்கல்லூரியில் இருந்து நான் சென்னை ஓடி வந்தேன்.  எப்படி இருந்தாலும் 5 வருஷம் யாரிடமாவது  உதவி இயக்குனரா வேலை பார்க்கனும். இங்கேயும் 5 வருஷம் படிக்கனும். அதனால் இப்பவே கிளம்பலாம் னு கிளம்பிட்டேன்.." என்றார் இயக்குனர் மாரி செல்வராஜ்.

பின் தொடர்ந்து சென்னையில் ஜவுளி கடையில் பணியாற்றிய அனுபவம் குறித்து பேசுகையில், "நான் சென்னைக்கு வந்து தி நகர் ல ஒரு ஜவுளி கடையில வேலை பார்த்தேன். 2 மாதம் தான் வேலை பார்த்தேன் சம்பளம் கூட வாங்காம ஓடி வந்துட்டேன். என்னால முடியல அங்க வேலை பார்க்க.. அங்காடி தெரு படம் வரலன்னா என்னோட முதல் படம் அதுவா கூட இருக்கலாம். அங்காடி தெரு படம் வந்தப்போ நான் ரொம்ப வருத்தப்பட்ட அந்த படம் வந்தப்போ..  அதன்பின் தான் பரியேரும் பெருமாள் யோசிச்சேன். அங்காடி தெரு வரும் முன்னாடி சென்னை சார்ந்த கதைக்களத்தை படம் பண்ணலாம் னு தான் இருந்தேன்." என்றார் இயக்குனர் மாரி செல்வராஜ்

மேலும் மாமன்னன் இயக்குனர் மாரி செல்வராஜ் அவர்கள் பகிர்ந்து கொண்ட சுவாரஸ்யமான தகவல் கொண்ட நேர்காணல் இதோ..

 

புஷ்பா 2 படத்திற்கு பின் அல்லு அர்ஜுன் உடன் 4வது முறை இணையும் பிளாக்பஸ்டர் இயக்குனர்... புது பட மாஸான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
சினிமா

புஷ்பா 2 படத்திற்கு பின் அல்லு அர்ஜுன் உடன் 4வது முறை இணையும் பிளாக்பஸ்டர் இயக்குனர்... புது பட மாஸான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

கோலாகலமாக நடைபெற்ற ராம் சரண், உபாசனா தம்பதியினர் குழந்தையின் பெயர் சூட்டும் விழா.. - இணையத்தில் வைரலாகும் அழகான பெயர்..!
சினிமா

கோலாகலமாக நடைபெற்ற ராம் சரண், உபாசனா தம்பதியினர் குழந்தையின் பெயர் சூட்டும் விழா.. - இணையத்தில் வைரலாகும் அழகான பெயர்..!

“நான் மகிழ்ச்சி அடைகிறேன்..” விஜய் மக்கள் இயக்கத்தினருக்கு தளபதி எழுதிய கடிதம்..!
சினிமா

“நான் மகிழ்ச்சி அடைகிறேன்..” விஜய் மக்கள் இயக்கத்தினருக்கு தளபதி எழுதிய கடிதம்..!