உலகநாயகன் கமல்ஹாசன் - Hவினோத் கூட்டணியின் KH233 அறிவிப்பு... பக்கா மாஸாக வந்த  ப்ரோமோ வீடியோ இதோ!

உலகநாயகன் கமல்ஹாசன் - Hவினோத் கூட்டணியின் KH233 அறிவிப்பு,ulaganayagan kamal haasan h vinoth in kh233 movie official announcement | Galatta

சமீபகாலமாக ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த உலக நாயகன் கமல்ஹாசனின் 233 வது திரைப்படமான KH233 திரைப்படத்தை இயக்குனர் H.வினோத் இயக்குவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியானது. ஒட்டுமொத்த இந்திய திரை உலகமும் வியந்து பார்க்கும் கலைஞானியாக திகழும் உலக நாயகன் கமல்ஹாசன் தற்போது பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

இதனைத் தொடர்ந்து தனது திரைப் பயணத்தில் 234வது படமாக தயாராகும் KH234 திரைப்படத்தில் இயக்குனர் மணிரத்னம் உடன் இணைகிறார் உலக நாயகன் கமல்ஹாசன். முன்னதாக கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்து இந்திய சினிமாவின் ஆகச் சிறந்த படைப்புகளில் ஒன்றாக காலம் கடந்து நிற்கும் நாயகன் படத்திற்கு பிறகு மீண்டும் இயக்குனர் மணிரத்னம் உலகநாயகன் கமல்ஹாசன் இணையும் KH234 படம் எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகளை கூட்டி இருக்கிறது. ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் ரெட் ஜெயன்ட் மூவிஸ் மற்றும் மெட்ராஸ் ராக்கர்ஸ் நிறுவனங்கள் இணைந்து வழங்கும் KH234 திரைப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்க இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முன்னதாக கமல்ஹாசனின் திரைப் பயணத்தின் 233 வது திரைப்படமாக உருவாகும் KH233 திரைப்படத்தை இயக்கப் போவது யார்? என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. அதில் முதலாவதாக மலையாளத்தில் நடிகர் ஃபகத் பாசில் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான மாலிக் திரைப்படத்தின் இயக்குனர் மகேஷ் நாராயணன் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக கமல்ஹாசன் அவர்களே முன்பு தெரிவித்து இருந்தார். இத்திரைப்படத்திற்கு திரைக்கதையும் அவரே எழுதுகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் அந்த திரைக்கதை எழுதும் பணியையும் கமல்ஹாசன் தொடங்கியிருந்தார். 

அதேபோல் இயக்குனர் பா.ரஞ்சித் விருமாண்டி திரைப்படத்தின் பாணியில் மதுரையை கதைக்களமாக வைத்து ஒரு படம் இயக்குவதாக விரும்புவதாக தெரிவித்திருந்தார். இதற்கிடையில் இயக்குனர் வெற்றிமாறன், உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களை சந்தித்து ஒரு கதை சொல்லி இருப்பதாகவும் அதற்கான அடுத்த கட்ட பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் செய்திகள் வெளி வந்தன. இதனிடையே சமீபகாலமாக இயக்குனர் H.வினோத் முதல்முறையாக உலக நாயகன் கமல்ஹாசனுடன் KH233 திரைப்படத்தில் இணைகிறார் என்ற தகவல்களும் வெளிவந்தன.

இந்த நிலையில் கமல் ஹாசனின் KH233 திரைப்படத்தை இயக்குனர் H.வினோத் இயக்குவதாக தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்துள்ளது. ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் 52 ஆவது திரைப்படமாக உருவாகும் இந்த புதிய திரைப்படத்தை ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தோடு இணைந்து டர்மரிக் மீடியா நிறுவனம் தயாரிக்கிறது. RISE to RULE என்ற வாசகத்தோடு KH233 படத்தின் அறிவிப்பு ப்ரோமோ வீடியோவை பட குழு தற்போது வெளியிட்டுள்ளது. கையில் தீப்பந்தத்தோடு உலகநாயகன் கமலஹாசன் இருக்கும் அதிரடியான அந்த ப்ரோமோ வீடியோ தற்போது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

முன்னதாக உலகநாயகன் கமல்ஹாசனின் தலைவன் இருக்கின்றான் என்ற ஒரு அரசியல் கதைக்களத்தை கொண்ட திரைப்படம் சில வருடங்கள் முன் அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்காக இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க பாடல்களும் கம்போஸ் செய்யப்பட்டன. அதன் பின்னர் அது குறித்த எந்த அறிவிப்பும் வராத நிலையில் தற்போது இயக்குனர் H.வினோத் இயக்கத்தில் நடிக்கும் KH233 திரைப்படம் தலைவன் இருக்கின்றான் படமாக இருக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளிவரும் என தெரிகிறது. உலகநாயகன் கமல்ஹாசன் - H.வினோத் கூட்டணியில் உருவாக இருக்கும் KH233 திரைப்படத்தின் அறிவிப்பு ப்ரோமோ இதோ…
 

And it begins…#RKFI52 #KH233
#RISEtoRULE #HVinoth #Mahendran @RKFI @turmericmediaTM @magizhmandram pic.twitter.com/7cej87cghE

— Kamal Haasan (@ikamalhaasan) July 4, 2023

“பரியேரும் பெருமாள் படத்திற்கு முன்பு நான் யோசிச்சு வெச்ச கதை இது..” மாரி செல்வராஜ் பகிர்ந்த ருசிகர தகவல் – Exclusive Interview உள்ளே..
சினிமா

“பரியேரும் பெருமாள் படத்திற்கு முன்பு நான் யோசிச்சு வெச்ச கதை இது..” மாரி செல்வராஜ் பகிர்ந்த ருசிகர தகவல் – Exclusive Interview உள்ளே..

“யோஹன் அத்யாயம் ஒன்று எப்போது..?” தளபதி விஜயுடன் கூட்டணி அமைப்பது குறித்து இயக்குனர் கௌதம் மேனன் பகிர்ந்து கொண்ட தகவல் – Exclusive interview உள்ளே..
சினிமா

“யோஹன் அத்யாயம் ஒன்று எப்போது..?” தளபதி விஜயுடன் கூட்டணி அமைப்பது குறித்து இயக்குனர் கௌதம் மேனன் பகிர்ந்து கொண்ட தகவல் – Exclusive interview உள்ளே..

முதல் முறையாக குழந்தையின் புகைப்படத்தை பகிர்ந்த சரவணன் மீனாட்சி ஜோடி.!  வாழ்த்துகளுடன் வைரலாகும் க்யூட் புகைப்படம் உள்ளே..
சினிமா

முதல் முறையாக குழந்தையின் புகைப்படத்தை பகிர்ந்த சரவணன் மீனாட்சி ஜோடி.! வாழ்த்துகளுடன் வைரலாகும் க்யூட் புகைப்படம் உள்ளே..