தமிழ் திரை உலகின் குறிப்பிடப்படும் இயக்குநர்களில் ஒருவராகவும் சிறந்த  தயாரிப்பாளராகும் நல்ல நடிகராகவும் வலம் வருபவர் M.சசிகுமார். அடுத்ததாக அஞ்சல திரைப்படத்தின் இயக்குனர் தங்கம்.பா.சரவணன் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் தற்போது கதாநாயகனாக M.சசிகுமார் நடித்து வருகிறார்.

முன்னதாக முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் இயக்குனர் சத்யசிவா இயக்கத்தில் நடித்துள்ள காமன்மேன் திரைப்படத்தின் இறுதிகட்ட பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், M.சசிகுமார் நடித்துள்ள பகைவனுக்கு அருள்வாய் மற்றும் நா நா ஆகிய திரைப்படங்கள் விரைவில் அடுத்தடுத்து ரிலீஸாக தயாராகி வருகின்றன.

இந்த வரிசையில் M.சசிகுமார் நடிப்பில் அடுத்து தயாராகி வரும் திரைப்படம் காரி. இயக்குனர் ஹேமந்த் இயக்கத்தில் சசிகுமார் கதாநாயகனாக நடிக்கும் காரி திரைப்படத்தில் பார்வதி அருண், சக்கரவர்த்தி, பாலாஜி சக்திவேல், ஆடுகளம் நரேன், அம்மு அபிராமி, ரெட்டின் கிங்ஸ்லீ, நாகி நீடு, ராம்குமார் & சம்யுக்தா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்

பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரித்துள்ள காரி திரைப்படத்திற்கு கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்ய டி.இமான் இசையமைத்துள்ளார். இந்நிலையில் காரி திரைப்படத்திலிருந்து எங்கும் ஒளி பிறக்குமே எனும் பாடல் தற்போது வெளியாகியுள்ளது. சசிகுமாரின் காரி திரைப்படத்தின் எங்கும் ஒளி பிறக்குமே பாடல் இதோ…