விக்ரம், பீஸ்ட் தொடர்ந்து Mocobot பயன்படுத்திய சிவகார்த்திகேயனின் மாவீரன்.. - படப்பிடிப்பு தளத்திலிருந்து Special glimpse இதோ..

சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தில் பயன்படுத்திய சிறப்பு கேமரா -  maaveeran shooting spot viral video | Galatta

தமிழ் சினிமாவின் மீது நாளுக்கு நாள் கவனம் திரும்புவதற்கு காரணம் அதன் தரம் கூடிக் கொண்டே இருக்கிறது. கதையில் மட்டுமல்லாமல் தொழில்நுட்ப ரீதியாகவும் தமிழ் சினிமா கவனம் பெற்று வருகிறது, பொதுவாகவே தமிழ் சினிமாவில் புதிய தொழில் நுட்பம் அல்லது புதிய முயற்சியை கையிலெடுப்பது இயக்குனர் சங்கர் மற்றும் உலக நாயகன் கமல் ஹாசன். இவர்கள் வரிசையில் பல இயக்குனர்கள் பல வழிகளில் முயற்சி செய்து வருகின்றனர். திரைப்படத்தில் ஒரு நிமிடம் அந்த காட்சி இருந்தாலும் அதற்கான மெனக்கெடல் அதிகாமாகவே உள்ளது. அதன் படி பல இயக்குனர்கள் ஒரு காட்சிக்காக நிறைய யுக்திகளை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் மண்டேலா திரைப்பட புகழ் இயக்குனர் மடோனே அஷ்வின் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘மாவீரன். அதிரடி ஆக்ஷன் காட்சிகளுடன் இப்படத்தின் டைட்டில் வெளியீட்டு  வீடியோ முன்னதாக வெளியாகி வைரலாகியது. இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் மிக மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படத்தின் ஒரு சிறப்பு காட்சிக்காக அதிநவீன மோகோபாட் கேமரா வை பயன்படுத்தியுள்ளனர். தானியாங்கி முறையில் செய்கைகளை கணித்து படமாக்கும் இந்த கேமராவில் பதியப்பட்ட காட்சி பார்வையாளர்களுக்கு ஒரு தனி வித்யாசமான உணர்வை கொடுக்கும்.  

முன்னதாக இந்த கேமராவை தமிழ் சினிமாவில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் திரைப்படத்தில் பயன்படுத்தியிருப்பார்கள். இடைவெளி காட்சிக்கு மேலும் சுவாரஸ்யம் கூட்டும் அந்த சண்டைக் காட்சி இந்த பிரத்யேக கேமெராவில் படமாக்கப்பட்டது ரசிகர்களை குதுகலப்படுதியது. மேலும் அதிகம் பேசப்பட்டதும் கூட. அதன் முன்னதாக அந்த கேமேராவினை தளபதி விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படத்தில் பயன்படுத்தியிருப்பார்கள். மேலும் சமீபத்தில் அந்த கேமராவின் புகழ் அதிகமாக தற்போது மற்ற மொழி திரையுலகிலும் பரவலாக பயன்படுத்தி வருகின்றனர். அதன்படி சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்படத்திலும் அந்த கேமரா பயன்படுத்தியிருக்கும் வீடியோவை சிவகார்த்திகேயன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார். இதனை தொடர்ந்து அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி அதிகம் பேசப்பட்டு வருகிறது.

lokesh kanagaraj shares special pictures at thalapathy vijay leo shooting spot

மாவீரன் திரைப்படத்தில் ஒளிப்பதிவு செய்கிறார் விது அய்யன்னா. மேலும் இப்படத்தில் இசையமைப்பாளர் பரத் சங்கர் இசையமைக்க பிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்கிறார். இப்படத்தில் சிவ கார்த்திகேயனுடன் இணைந்து அதீதி சங்கர், சுனில், மிஷ்கின், சரிதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

விடிவி.. பிரேமம்.. டைட்டானிக்.. காதலர் தினத்தில் ரீ ரிலீஸாகும் திரைப்படங்கள் என்னென்ன? - அட்டகாசமான பட்டியல் இதோ..
சினிமா ஸ்பெஷல்ஸ்

விடிவி.. பிரேமம்.. டைட்டானிக்.. காதலர் தினத்தில் ரீ ரிலீஸாகும் திரைப்படங்கள் என்னென்ன? - அட்டகாசமான பட்டியல் இதோ..

தொடர்ந்து தள்ளி போகும் சமந்தாவின் சாகுந்தலம் திரைப்படம் - புது ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு..
சினிமா

தொடர்ந்து தள்ளி போகும் சமந்தாவின் சாகுந்தலம் திரைப்படம் - புது ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு..

‘வேலைன்னு வந்துட்டா..’ ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் மும்முரம் காட்டும் இயக்குனர் ஷங்கர் - வைரலாகும் புகைப்படம் இதோ..
சினிமா

‘வேலைன்னு வந்துட்டா..’ ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் மும்முரம் காட்டும் இயக்குனர் ஷங்கர் - வைரலாகும் புகைப்படம் இதோ..