அஜித் குமாரின் அதிரடியான துணிவு பட புது சர்ப்ரைஸ்... ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்த ஸ்பெஷல் ட்ரீட் இதோ!

அஜித் குமாரின் துணிவு பட OST வெளியீடு,ajith kumar in thunivu movie ost out now | Galatta

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர கதாநாயகர்களில் ஒருவரான நடிகர் அஜித்குமார் நடிக்கும் அடுத்தடுத்த திரைப்படங்கள் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கின்றன. முன்னதாக அஜித்குமாரின் 62 ஆவது திரைப்படமாக, முன்னணி தயாரிப்பு நிறுவனமான லைகா ப்ரோடக்ஷன்ஸ் தயாரிப்பில் தயாராகும் AK62 திரைப்படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இப்படத்தில் நடிகர்கள் அரவிந்த்சாமி மற்றும் சந்தானம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகளாக ரசிகர்கள் காத்திருந்தனர்.

ஆனால் சமீபத்தில் AK62 திரைப்படத்திலிருந்து இயக்குனர் விக்னேஷ் சிவன் விலகியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. முன்னதாக அஜித்குமாரின் வலிமை திரைப்படத்திற்கு பாடல்கள் எழுதிய இயக்குனர் விக்னேஷ் சிவன் அஜித்குமாரை இயக்கும் AK62 திரைப்படத்திற்காக ரசிகர்கள் உற்சாகத்தோடு காத்திருந்த நிலையில், இயக்குனர் விக்னேஷ் சிவன் விலகியதாக வெளிவந்திருக்கும் தகவல் பெறும் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.

இதனிடையே அஜித் குமார் நடிக்கும் AK62 திரைப்படத்தை, தொடர்ந்து அதிரடி ஆக்சன் திரைப்படங்களை இயக்கி வரும் இயக்குனர் மகிழ் திருமேனி இயக்க உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. அதேப்போல் வேதாளம் மற்றும் விவேகம் ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து அஜித் குமார் நடிக்கும் AK62 திரைப்படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைப்பதாக அறிவித்திருந்த நிலையில், AK62 திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் அடுத்த ஓரிரு தினங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக இயக்குனர் H.வினோத் இயக்கத்தில் அஜித் குமார் நடித்துள்ள துணிவு திரைப்படம் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட கடந்த ஜனவரி 11ஆம் தேதி பொங்கல் வெளியீடாக ரிலீசாகி ஹாட்ரிக் ஹிட்டாகிள்ளது. அஜித் குமாருடன் பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியார் கதாநாயகியாக நடிக்க, சமுத்திரக்கனி, ராஜதந்திரம் வீரா,  பிரபல பட்டிமன்ற பேச்சாளர் மோகனசுந்தரம், பால சரவணன், GM.சுந்தர், சிபி புவனச்சந்திரன், ஜான் கொக்கென், விஸ்வநாத் உத்தப்பா, பிக் பாஸ் பாவணி, தர்ஷன், அமீர் மற்றும் மமதி சாரி உட்பட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 

போனி கபூர் அவர்களின் தயாரிப்பில் நீரவ் ஷா ஒளிப்பதிவில், விஜய் வேலுக்குட்டி படத்தொகுப்பு செய்துள்ள துணிவு திரைப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். நடன இயக்குனராக கல்யாண் மாஸ்டர் பணியாற்றியுள்ள துணிவு படத்தில் ஸ்டண்ட் இயக்குனராக சுப்ரீம் சுந்தர் பணியாற்றியுள்ளார். பக்கா அதிரடி ஆக்சன் படமாக அனைத்து தரப்பு ரசிகர்களாலும் கொண்டாடப்பட்ட துணிவு திரைப்படம் தற்போது NETFLIX தளத்திலும் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

துணிவு திரைப்படத்தின் வெற்றிக்கு பக்கபலமாக அமைந்த விஷயங்களில் இசையமைப்பாளர் ஜிப்ரானின் பின்னணி இசையும் குறிப்பிடத்தக்கது. இந்தப் பின்னணி இசையின் ட்ராக்குகளுக்காக ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு காத்திருந்தனர். இந்நிலையில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் வகையில் இசையமைப்பாளர் ஜிப்ரான் துணிவு திரைப்படத்தில் பயன்படுத்திய அத்தனை பின்னணி இசை ட்ராக்குகளையும் ஒன்றிணைத்த OSTயை தற்போது வெளியிட்டுள்ளார். அதிரடியான துணிவு படத்தின் OST இதோ…
 

பழைய பாடலை அட்டகாசமான Remix செய்யும் ராகவா லாரன்ஸ்.. – வைரலாகும் ருத்ரன் பட அறிவிப்பு இதோ..
சினிமா

பழைய பாடலை அட்டகாசமான Remix செய்யும் ராகவா லாரன்ஸ்.. – வைரலாகும் ருத்ரன் பட அறிவிப்பு இதோ..

தனுஷ் வாத்தியார் இல்லை, அவர் ‘வாத்தி’.. இயக்குனர் வெங்கியின் சுவாரஸ்யமான பேட்டி.. - வைரலாகும் வீடியோ இதோ..
சினிமா

தனுஷ் வாத்தியார் இல்லை, அவர் ‘வாத்தி’.. இயக்குனர் வெங்கியின் சுவாரஸ்யமான பேட்டி.. - வைரலாகும் வீடியோ இதோ..

வாத்தி பட INTERVAL சீன்ல தனுஷ் சாரோட நடிப்பு... பிரம்மித்த இயக்குனர் வெங்கி அட்லுரி! அட்டகாசமான வீடியோ இதோ
சினிமா

வாத்தி பட INTERVAL சீன்ல தனுஷ் சாரோட நடிப்பு... பிரம்மித்த இயக்குனர் வெங்கி அட்லுரி! அட்டகாசமான வீடியோ இதோ