தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வரும் இயக்குனர் லிங்குசாமியின் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த அஞ்சான் மற்றும் சண்டக்கோழி 2 ஆகிய திரைப்படங்கள் எதிர்பார்த்த வரவேற்பை பெற தவறிய நிலையில், தனது அடுத்த வெற்றித் திரைப்படமாக லிங்குசாமி இயக்கத்தில் வெளிவர உள்ள திரைப்படம் தி வாரியர்.

காவல்துறை அதிகாரியாக பிரபல தெலுங்கு நடிகர் ராம் பொத்தினெனி கதாநாயகனாக நடிக்க, தெலுங்கு மற்றும் தமிழ் என இரு மொழிகளில் தயாராகியுள்ள தி வாரியர் திரைப்படத்தில் இளம் நடிகை கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடித்துள்ளார். நடிகர் ஆதி வில்லனாக நடித்துள்ள இப்படத்தில் அக்ஷரா கௌடா, நதியா, பாரதிராஜா, ரெட்டின் கிங்ஸ்லி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

சீனிவாச சில்வர் ஸ்கிரீன் தயாரிப்பில் உருவாகியிருக்கும் தி வாரியர் திரைப்படம் வருகிற ஜூலை 14-ம் தேதி ரிலீஸாகவுள்ளது. சுஜித் வாசுதேவ் ஒளிப்பதிவில், நவீன் நூலி படத்தொகுப்பு செய்துள்ள, தி வாரியர் திரைப்படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார். இதனிடையே படத்தின் PRE RELEASE நிகழ்ச்சி நாளை ஜூன் 6ஆம் தேதி சென்னையில் சத்யம் சினிமாஸில் நடைபெற உள்ளது.

இந்நிலையில் இந்த நிகழ்ச்சிக்கு வர உள்ள முன்னணி நட்சத்திரங்களின் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. பாரதிராஜா, மணிரத்னம், ஷங்கர், கௌதம் வாசுதேவ் மேனன், வெற்றிமாறன், லோகேஷ் கனகராஜ், பாலாஜி சக்திவேல், விக்ரமன், செல்வமணி, H.வினோத், சிவா, சசி, கார்த்திக் சுப்புராஜ், வசந்தபாலன், விஜய்மில்டன், PS.மித்ரன், R.பன்னீர்செல்வம் உள்ளிட்ட இயக்குனர்களும், இளைய திலகம் பிரபு, விஷால், ஆர்யா, கார்த்தி, கீர்த்தி சுரேஷ், விக்ரம் பிரபு, ரோபோ ஷங்கர் உள்ளிட்ட நடிகர்களும், தயாரிப்பாளர் G.N.அன்புச்செழியன் மற்றும் ஒளிப்பதிவாளர் மதி உட்பட தி வாரியர் படத்தின் படக்குழுவினர் அனைவரும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 

MASSive Celebrations🥳

Witness the Star Studded Grandiose #TheWarriorr (Tamil) Pre Release Event tomorrow from 6.30 PM at Sathyam Cinemas, Chennai🤩#TheWarriorrOnJuly14@ramsayz @AadhiOfficial @dirlingusamy @ThisisDSP @IamKrithiShetty @SS_Screens @adityamusic @masterpieceoffl pic.twitter.com/qt0GKsIAcQ

— Srinivasaa Silver Screen (@SS_Screens) July 5, 2022