“அப்பா ஞாபகமாக வைத்திருந்த 1.50 லட்சம் ரூபாய் மதிப்பிலா பேனாவை காணவில்லை” என்று, காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்த் கவலையுடன் தெரிவித்து உள்ளார்.

“வசந்த அன் கோ” என்றாலே, சிரித்த முகத்தோடு வந்து செல்லும் அதன் உரிமையாளர் வசந்தகுமார் அண்ணாச்சியின் முகம் தான், அனைவரின் ஞாபகத்திலும் நிழல் ஆடிச் செல்லும். 

“மளிகைக் கடை முதல் மக்களவை வரை, தன்னுடைய அயராது மாபெரும் உழைப்பாள் அனைவர் உள்ளங்களிலும், உயர்ந்து நின்றவர் வசந்தகுமார் அண்ணாச்சி. அவர் தான், “வசந்த அன் கோ” வின் அடையாளம். நினைவுச் சின்னம். 

அப்படியான புன்னகை மன்னன் வசந்தகுமார் கட்டி எழுப்பிய மாபெரும் “வசந்த அன் கோ” சாம்ராஜ்யம், 3 தலைமுறைகளைத் தாண்டி இன்றும் கொடிகட்டிப் பறக்கிறது. 

ஆம், “இந்தியாவின் நம்பர் ஒன் டீலர்” ஆன, வசந்த் அன் கோ அண்ணாச்சி தொழில் அதிபராக எல்லோருக்கும் தெரிந்திருந்தாலும், அவர் எழுத்தில் அதிகம் ஆர்வம் கொண்டவர். அதற்குச் சாட்சியாக இருப்பது தான் வசந்தகுமார் அண்ணாச்சி கைப்பட எழுதிய “வெற்றிபடிக்கட்டு” புத்தகம்.

அப்படியாக, “ஒரு பக்கம் எழுத்தாளராகவும் ஜொலித்த நம்ம வசந்தகுமார் அண்ணாச்சி, ஒரு பேனா பிரியர் என்று சொன்னால் நம்ப முடிகிறதா?”

ஆம், அதுவும் “வசந்தகுமார் அண்ணாச்சி பயன்படுத்தி வந்த பேனா எப்படிப்பட்டது தெரியுமா? அதன் மதிப்பு எவ்வளவு தெரியுமா?”

அதாவது, “தற்போது 2K கிட்ஸ் காலம் என்பதால், தொழில் நுட்ப ரீதியாக சற்றே முன்னேறி மைக்ரோ டிப் பேனா, ஜெல் பேனா என்று பலவகைப்பட்ட மை பேனாக்களைப் பயன்படுத்தி, கற்று வருகிறோம். இவை தவிர, ரீஃபில் பேனாக்களும் உண்டு. ஆனால், நம்ம ஊர்களில் சாதாரண மை பேனாக்கள், ஹீரோ பேனா, பார்க்கர் பேனா என்று பயன்படுத்தி வந்த 80s, 90s கிட்ஸ் காலங்கள் எல்லாம் தற்போது மலையேறி” போய்விட்டது.

“இப்படியான நீப் பேனாக்களை தானட நீண்ட நாட்கள் பயன்படுத்த முடியும். பேனா வாங்கும் போதே, ஒரு பாட்டில் இங்க் வாங்கிவிட்டால் ஒரு வருடம் வரை எந்தச் செலவும் செய்யாமல் அந்த மாதிரியான நீப் பேனாவை பயன்படுத்தலாம். 90s கிட்ஸ்க்கு இது தெரியும்.

அதிலும் குறிப்பாக, “பேனாக்களில் நிப் போனாக்கள் தான் ஹீரோ என்று சொன்னால் நம்ப முடிகிறதா?”

முக்கியமாக,  70s முதல் 90s கிட்ஸ் வரையிலான பள்ளி மாணவர்கள் பலருக்கும் ஆதர்ச பேனா ஹீரோ பேனா தான். அதிலும், உள்நாட்டில் தயாரிக்கப்படும் பேனா தனி ரகம் என்றால்,  வெளிநாட்டில் இருந்து கொண்டு வரப்படும் தரமான பேனாக்கள் இன்னும் தனி ரகம். அந்த பேனா, தாளில் எழுதும் போது வழுக்கி ஓடும்” என்றும், கூறுவார்கள்.

அப்படியான அரு ஸ்டைலானா பேனாவைத் தான் வசந்தகுமார் அண்ணாச்சி, தனது வாழ்நாளில் நீண்ட நாட்களாகப் பயன்படுத்தி வந்திருக்கிறார். அந்த பேனாவின் மதிப்பு ரூ.1.50 லட்சம் ஆகும். 

அதுவும், ஜெர்மன் நாட்டில் தயாரிக்கப்படும் நூற்றாண்டு பாரம்பரியமிக்க இந்த பேனாவானது, உலகின் மிக முக்கியப் பிரமுகர்கள் குறிப்பிட்ட சிலரிடம் மட்டுமே பயன்படுத்தும் பேனாவாகவும் அது இருந்திருக்கிறது.

அந்த பேனா, வசந்தகுமார் அண்ணாச்சிக்கு எப்போதுமே ஒரு சென்டிமென்ட்டாகவே இருந்திருக்கிறது.

ஆனால், வசந்தகுமார் அண்ணாச்சி இந்த மன்னை விட்டு மறைந்த பிறகு, அப்பாவின் ஞாபகமாக, ஒரு சென்டிமென்ட்டாகவே அந்த பேனாவை பயன்படுத்தி வந்திருக்கிறார் வசந்தகுமார் அண்ணாச்சியின் மகனும், காங்கிரஸ் எம்.பி.யுமான விஜய் வசந்த்.

அப்பா (வசந்தகுமார்) தன்னுடன் இல்லா விட்டாலும், அவர் பயன்படுத்திய பேனா தனது பாக்கெட்டில் வைத்துக்கொள்ளும் போதெல்லாம், தன் கூடவே அப்பா (வசந்தகுமார்) இருப்பது போல் ஒரு எண்ணம் எப்போதும் காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்திடம் இருந்திருக்கிறது. தந்தையின் பேனாவை விஜய் வசந்த், ஒரு சென்டிமென்ட்டாகவே பார்த்து வந்திருக்கிறார்.

இப்படியான சூழலில் தான், சென்னை கிண்டியில் உள்ள ஒரு நட்சத்திர விடுதியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்த் கலந்து கொண்டார். பின்னர், அவர் அங்கிருந்து புறப்பட்டு உள்ளார். அப்போது, அவரது சட்டை பாக்கெட்டில் எப்போதும் இருக்கும் அப்பா (வசந்தகுமார்) ஞாபகத்தில் இருந்த அந்த பேனா, காணாமல் போனது தெரிய வந்திருக்கிறது. இதனால், கடும் அதிர்ச்சி அடைந்த விஜய் வசந்த், தனது கட்சியின் தொண்டர்கள் மூலம் அந்த பேனாவை தேடிப்பார்த்தும் அது கிடைக்காத நிலையில், அவர் அங்கேயே கலங்கி நின்று உள்ளார்.

இதனையடுத்து, அப்பா (வசந்தகுமார்) ஞாபகார்த்தமாக வைத்திருந்த பேனா தொலைந்தது குறித்து, சிறிது தாமதிக்காமல் சென்னை கிண்டியில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.

இது குறித்து, வழக்குப் பதிவு செய்த போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையின் ஒரு பகுதியாக, குறிப்பிட்ட அந்த நட்சத்திர விடுதியின் சிசிடிவி கேமரா காட்சிகளைக் கொண்டு, பேனா தொலைந்து குறித்து போலீஸ் தற்போது விசாரித்து வருகின்றனர். 

இதனிடையே,  அப்பா (வசந்தகுமார்) ஞாபகார்த்தமாக வைத்திருந்த பேனா தொலைந்தது குறித்து, காங்கிரஸ் கட்சியினரும், அவரது குடும்ப உறுப்பினர்களும் காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்திற்கு தற்போது ஆறுதல் கூறி வருகின்றனர். முக்கியமாக, விஜய் வசந்தின் பேனா தொலைந்த செய்தி, தற்போது இணையத்தில் பெரும் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.