தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர்களில் ஒருவராக வலம் வரும் இயக்குனர் விஜய் சந்தர், நடிகர் சிலம்பரசன்.TR கதாநாயகனாக நடித்து வெளிவந்த வாலு திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். இதனை அடுத்து சீயான் விக்ரமுடன் இணைந்த இயக்குனர் விஜய் சந்தர் இயக்கத்தில் அடுத்து வெளிவந்த ஸ்கெட்ச் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

தொடர்ந்து மக்கள் செல்வன் விஜய் சேதுபதியுடன் இணைந்த விஜய்சந்தர் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் சங்கத்தமிழன். இயக்குனராக மட்டுமல்லாமல் தற்போது தயாரிப்பாளராகவும் களமிறங்கியுள்ள இயக்குனர் விஜய் சந்தர் ஹன்சிகா மோத்வானி நடிப்பில் தயாராகும் புதிய திரைப்படத்தை தயாரித்துள்ளார்.

இந்நிலையில் இயக்குனர் விஜய் சந்தரின் தாயார் சுசீலா அவர்கள் இன்று (ஜூலை 5ம் தேதி) உயிரிழந்தார் என தற்போது தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு வயது 72. இயக்குனர் விஜய் சந்திரின் தாயார் சுசிலாவின் மறைவுக்கு கலாட்டா குழுமம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.

விஜய் சந்திரனின் தாயாரின் இறுதி சடங்கள் அவரது சொந்த ஊரான அரக்கோணத்தில் நாளை ஜூன் 6ஆம் தேதி அதிகாலை 6 மணி அளவில் நடைபெற உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இயக்குனர் விஜய் சந்தரின் தாயார் மறைவுக்கு தமிழ் திரையுலகினர் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.