தமிழ் சினிமாவின் பிரபல கதாநாயகிகளில் ஒருவரான நடிகை வாணி போஜன் நடிப்பில் அடுத்தடுத்து திரைப்படங்கள் வரிசையாக வெளிவர வருகின்றன. முன்னதாக சசிகுமார் கதாநாயகனாக நடித்திருக்கும் பகைவனுக்கு அருள்வாய், விக்ரம் பிரபு கதாநாயகனாக நடித்திருக்கும் பாயும் ஒளி நீ எனக்கு ஆகிய திரைப்படங்கள் நிறைவடைந்து விரைவில் வெளிவர தயாராகி வருகின்றன.

முன்னதாக இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய் கதாநாயகனாக நடித்திருக்கும் தமிழ் ராக்கர்ஸ் வெப்சீரிஸ்-ல் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள வாணிபோஜன், அடுத்ததாக பிரபு தேவாவின் ரேக்ளா, பரத்தின் 50வது படமாக தயாராகும் லவ் மற்றும் கவினின் ஊர்குருவி ஆகிய திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

மேலும் ராட்சசன் படத்தின் தயாரிப்பு நிறுவனமான AXESS FILM FACTORY தயாரிப்பில் அடுத்த த்ரில்லர் படமாக தயாராகியுள்ள மிரள் திரைப்படத்திலும் வாணிவாணிபோஜன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதனிடையே இயக்குனர் மார்க் ஜோயல் இயக்கத்தில் வாணிபோஜன் நடித்துள்ள திரைப்படம் கெஸினோ. மாதம்பட்டி சினிமாஸ் மற்றும்  MJ மீடியா ஃபேக்டரி இணைந்து கெசினோ திரைப்படத்தை தயாரித்துள்ளது.

வாணி போஜன், மாதம்பட்டி ரங்கராஜ், ரமேஷ் திலக் மற்றும் ஜான் மகேந்திரன் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் கெஸினோ படத்திற்கு கூடுதல் திரைக்கதை மற்றும் வசனங்களை ஜான் மகேந்திரன் எழுத, விக்னேஷ்.JK ஒளிப்பதிவில் தினேஷ் நாகராஜன் மற்றும் ஸ்டேன்லி சேவியர் இணைந்து இசை அமைக்க, இயக்குனர் மார்க் ஜோயல் படத்தொகுப்பும் செய்துள்ளார். இந்நிலையில் கெஸினோ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் விக்னேஷ் சிவன் தற்போது வெளியிட்டுள்ளார். கவனத்தை ஈர்க்கும் கெஸினோ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ…
 

Happy to launch the first look of #Casino

Starring @Madhampatty @vanibhojanoffl @RameshThilak53 @Johnroshan

Written Edited & Directed by @markjoel_r #CasinoTheMovie@actorchella @VigneshJK6 @iamdhinesh @Stanley_Xavi @deepakbhojraj pic.twitter.com/gigZUq941S

— Vignesh Shivan (@VigneshShivN) July 5, 2022