தமிழ் சினிமாவின் ஃபேவரட் Celebrity Couple-ஆன நடிகை நயன்தாரா. நயன்தாரா-இயக்குனர் விக்னேஷ் சிவனின் திருமணம் கடந்த மாதம் மகாபலிபுரத்தில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த அழகிய திருமணத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஷாரூக்கான் உட்பட பல முன்னணி பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

இதனையடுத்து இயக்குனர் அட்லி இயக்கத்தில் பாலிவுட் சூப்பர்ஸ்டார் ஷாருக்கான் நடிக்கும் ஜவான் படத்தின் மூலம் பாலிவுட்டில் கதாநாயகியாக அறிமுகமாகும் நடிகை நயன்தாரா தொடரந்து தெலுங்கில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி உடன் இணைந்து லூசிஃபர் படத்தின் ரீமேக்காக உருவாகும் காட்ஃபாதர் படத்திலும் நடித்து வருகிறார்.

இதனிடையே பிரேமம் படத்தின் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நடிகர் பிரித்விராஜுடன் இணைந்து நயன்தாரா நடித்துள்ள கோல்ட் திரைப்படம் விரைவில் ரிலீஸாக தயாராகி வருகிறது. இந்த வரிசையில் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் நயன்தாரா நடித்துள்ள O2 திரைப்படம் கடந்த ஜூன் 17ஆம் தேதி நேரடியாக டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் ரிலீசானது.

த்ரில்லர் படமாக இயக்குனர் G.S.விக்னேஷ் இயக்கத்தில் வெளிவந்த O2 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. O2 திரைப்படத்திற்கு தமிழ்.A.அழகன் ஒளிப்பதிவில் செல்வா.R.K படத்தொகுப்பு செய்ய, விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார். இந்நிலையில் O2 திரைப்படத்திலிருந்து வானம் யாவும் வீடியோ பாடல் தற்போது வெளியானது. அந்த வீடியோ பாடல் இதோ…