தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஒரு நடிகராக வலம் வருபவர் மிர்ச்சி சிவா.தனது காமெடி கலந்த நடிப்பு மூலம் ரசிகர்களிடம் பிரபலமான நடிகராக மாறினார்.இவர் அடுத்ததாக காசேதான் கடவுளடா,சுமோ,கோல்மால்,சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும் படத்தில் மிர்ச்சி சிவா ஹீரோவாக நடித்து வருகிறார்.மேகா ஆகாஷ்,அஞ்சு குரியன் இந்த படத்தில் ஹீரோயின்களாக நடித்து வருகின்றனர்.பாடகர் மனோ,மா கா பா ஆனந்த்,திவ்யா கணேஷ்,KPY பாலா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.

லார்க் ஸ்டுடியோஸ் இந்த படத்தினை தயாரித்துள்ளனர்.லியோன் ஜேம்ஸ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் முதல் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.டிப்ஸ் தமிழ் இந்த படத்தின் ஆடியோ உரிமையை கைப்பற்றியுள்ளனர்.

இந்த படத்தின் இரண்டாவது பாடலான ஜோடி சேரலாம் என்ற பாடல் நாளை வெளியாகவுள்ளது.இந்த பாடலின் ப்ரோமோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது.இந்த பாடலை சூப்பர் சிங்கர் மற்றும் குக் வித் கோமாளி மூலம் பிரபலமான பரத் இசையமைப்பாளர் லியோன் ஜேம்ஸுடன் இணைந்து பாடியுள்ளார்.இந்த ப்ரோமோ வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்