ரெட் ஜெயன்ட் மூவீஸ் வெளியிடும் மற்றொரு முக்கிய படம்! விவரம் உள்ளே
By Anand S | Galatta | July 18, 2022 12:21 PM IST

தமிழ் திரை உலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான உதயநிதி ஸ்டாலின் அவர்களின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தொடர்ந்து முக்கியமான திரைப்படங்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டில் எதற்கும் துணிந்தவன், ராதேஷ்யாம், பீஸ்ட், காத்துவாக்குல ரெண்டு காதல், டான், விக்ரம், ராக்கெட்ரி உள்ளிட்ட திரைப்படங்களை வெளியிட்டுள்ளது.
இதனையடுத்து சந்தானம் நடிப்பில் ஜூலை 29-ம் தேதி வெளியாகும் குலுகுலு, சீயான் விக்ரம் நடிப்பில் ஆக்ஸ்ட் 11-ம் தேதி வெளியாகும் கோப்ரா, தனுஷ் நடிப்பில் ஆகஸ்ட் 18-ம் தேதி வெளியாகும் திருச்சிற்றம்பலம், சிலம்பரசன்TR நடிப்பில் செப்டம்பர் 15-ம் தேதி வெளியாகும் வெந்து தணிந்தது காடு, கார்த்தி நடிப்பில் அக்டோபர் 24ஆம் தேதி தீபாவளி வெளியீடாக ரிலீசாகும் சர்தார் ஆகிய திரைப்படங்களை ரெட் ஜெயண்ட் மூவிஸ் அடுத்தடுத்து வெளியிட உள்ளது.
இந்த வரிசையில் அடுத்ததாக மற்றொரு முக்கிய திரைப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிடவுள்ளது. ஹாலிவுட்டில் நடிகர் டாம் ஹாங்க்ஸ் நடித்த ஃபாரஸ்ட் கம்ப் திரைப்படத்தைத் தழுவி பாலிவுட் ரீமேக்காக ஆமிர் கான் நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் லால் சிங் சத்தா. இயக்குனர் அட்வைத் சந்தன் இயக்கியுள்ள லால் சிங் சத்தா படத்தை ஆமிர் கான் புரொடக்ஷன்ஸ் மற்றும் Viacom18 ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ளன.
ஆமிர் கானுடன் இணைந்து நடிகை கரீனா கபூர் கதாநாயகியாக நடிக்க, மோனா சிங், நாகசைதன்யா, நிகர் கான் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள லால் சிங் சத்தா படத்தில் முக்கியமான கௌரவ தோற்றத்தில் ஷா ருக் கான் நடித்துள்ளார். வருகிற ஆகஸ்ட் 11ஆம் தேதி லால் சிங் சத்தா படம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. இந்நிலையில் லால் சிங் சத்தா படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Proud and honoured to present the extraordinary journey of #LaalSinghChaddha.
— Red Giant Movies (@RedGiantMovies_) July 16, 2022
Tamil Nadu theatrical release by #RedGiantMovies 🎊 👏#AamirKhan #KareenaKapoorKhan @Udhaystalin @AKPPL_Official #AdvaitChandan @atul_kulkarni #KiranRao @chay_akkineni pic.twitter.com/h83GxIKiw6