இந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக விளங்கும் நடிகர் தனுஷ் தற்போது ஹாலிவுட் திரையுலகிலும் பிரபல நடிகராக இடம்பிடித்துள்ளார். அந்தவகையில் அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் படத்தின் இயக்குனர்கள் ரூஸோ சகோதரர்கள் இயக்கத்தில் உருவாகியிருக்கும் தி கிரே மேன் திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் தனுஷ் நடித்துள்ளார்.

ரயான் காஸ்லிங், க்ரிஸ் எவன்ஸ் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் தி கிரே மேன் திரைப்படத்தில் மிரட்டலான அதிரடி கதாபாத்திரத்தில் தனுஷ் நடித்துள்ளார். வருகிற ஜூலை 22ஆம் தேதி நெடஃபிளிக்ஸ் தளத்தில் தி கிரே மேன் திரைப்படம் ரிலீஸாகவுள்ளது. அடுத்ததாக தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகும் வாத்தி படத்தில் தற்போது நடித்து வருகிறார்.

முன்னதாக இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள நானே வருவேன் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில் இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள திருச்சிற்றம்பலம் திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 18-ம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் தனுஷ் உடன் இணைந்து நித்யாமேனன், பிரியா பவானி ஷங்கர், ராஷி கண்ணா, பாரதிராஜா, பிரகாஷ்ராஜ், முனீஷ்காந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள திருச்சிற்றம்பலம் திரைப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனுஷ் மற்றும் அனிருத் கூட்டணியில் உருவாகியிருக்கும் திருச்சிற்றம்பலம் திரைப்படத்திலிருந்து முன்னதாக வெளிவந்த தாய்க்கிழவி மற்றும் மேகம் கருக்காதா ஆகிய பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. இந்நிலையில் மேகம் கருக்காதி பாடலுக்கு நடன இயக்குனர் ஜானி மாஸ்டர் நடனம் ஆடும் புதிய மேக்கிங் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. அந்த வீடியோ இதோ…
 

Paraka paraka response to #MeghamKarukatha going high... 😍 ✨

Thank you everyone for the love. 🤗

Try this step with your loved once and tag me and @sunpictures pic.twitter.com/PrIVVpjbvE

— Jani Master (@AlwaysJani) July 17, 2022