2018 இறுதியில் வெளியாகி இந்தியா முழுவதும் வசூல் சாதனை படைத்த படம் KGF.யாஷ் ஹீரோவாக நடிக்க,
ஸ்ரீநிதி ஷெட்டி அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.பிரசாந்த் நீல் இந்த படத்தை இயக்கி இருந்தார்.தமிழ்,தெலுங்கு,மலையாளம்,ஹிந்தி என பல மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு இந்த படம் வெளியிடப்பட்டது.

இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி வருகிறது.இந்த படத்தின் ரிலீஸை ஒட்டுமொத்த இந்தியாவுமே ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறது,இதற்கு காரணம் கே.ஜி.எப் முதல் பாகம் ரசிகர்கள் மத்தியில் பெற்ற வரவேற்பே காரணம்.

இந்த படத்தில் முக்கிய வில்லன் கதாபாத்திரங்களில் ஒன்றான அதிரா என்ற கதாபாத்திரத்தில் பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நடிக்கிறார்.ரவீனா டாண்டன்,ரமேஷ் ராவ் உள்ளிட்ட நட்சத்திரங்கள் இந்த படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ள்ளனர்.கொரோனா காரணமாக இந்த படத்தின் ஷூட்டிங் தள்ளிப்போயுள்ளது.இந்த படத்தின் போஸ்ட் ப்ரொடுக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த படத்தின் முக்கிய வில்லனான ஆதிரா கதாபாத்திரத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்ட்டரை படக்குழுவினர் சில நாட்களுக்கு முன் வெளியிட்டனர்.இந்த போஸ்டர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த படத்தின் ஷூட்டிங் வெகுவிரைவில் தொடங்கவுள்ளதாக ஒரு தகவல் கிடைத்துள்ளது.ஆகஸ்ட் மாதத்தின் இரண்டாவது வாரம் அல்லது மூன்றாவது வாரத்தில் இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கவுள்ளது என்று இந்த படத்தின் எக்ஸிகியூடிவ் ப்ரொடியூஸர் கார்த்திக் கௌடா பிரபல நாளிதழுக்கு பேட்டி அளித்துள்ளார்.

அதில் Minerva Mills-ல் அமைக்கப்பட்ட ஒரு செட்டில் இந்த படத்தின் ஷூட்டிங் 15 நாட்களுக்கு நடைபெறும் என்றும் தக்க பாதுகாப்போடு இந்த ஷூட்டிங் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார்.மேலும் படப்பிடிப்பில் பங்குபெறும் அனைவரையும் படைப்பிடிப்பு முடியும்வரை அருகிலுள்ள ஒரு ஹோட்டலில் தங்கவைக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.இந்த 15 நாள் ஷூட்டிங்கை தொடர்ந்து படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஒரு சிறிய இடைவேளையை அடுத்து நடைபெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.இந்த படத்தின் வேலைகள் விரைவில் தொடங்கவுள்ளதை அடுத்து கே.ஜி.எப் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தில் உள்ளனர்.