ஒடிடி ரிலீஸ் அப்டேட்டுடன் வெளியான ‘வீரன்’ திருவிழா பாடலின் வீடியோ..! – ரசிகர்களால் வைரலாகும் வீடியோ உள்ளே..

வீரன் ஒடிடி ரிலீஸ் எப்போது அப்டேட் உள்ளே - Hip hop adhi veeran movie ott release announcement | Galatta

தமிழ் திரையுலகில் ரசிகர்களின் வரவேற்பை பெற்று இளம் நாயகனாக பல ஹிட் திரைபடங்களில் நடித்து வருபவர் ஹிப் ஹாப் ஆதி. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த வீரன் திரைப்படம் ரசிகர்களால் மிகப்பெரிய அளவு கொண்டாடப்பட்டது. மரகதநாணயம் பட இயக்குனர் ARK சரவணன் இயக்கத்தில் சூப்பர் ஹீரோ கதைகளத்தில் உருவான திரைப்படம் ‘வீரன்’. ஹிப் ஹாப் ஆதி சூப்பர் ஹீரோவாக நடித்திருக்கும் இப்படத்தில் இவருடன் இணைந்து வினய்,  ஆதிரா ராஜ், முனீஸ் காந்த், காளி வெங்கட், சசி செல்வராஜ் உள்ளிட்ட பலர் வீரன் திரைப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் இணைந்து உருவான இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் தீபக் D மேனன் ஒளிப்பதிவு செய்ய பிரசன்னா.GK படத்தொகுப்பு செய்துள்ளார்.

ரசிகர்களின் எதிர்பார்ப்பின் மத்தியில் கடந்த ஜூன் 2ம் தேதி வெளியான இப்படத்திற்கு ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக கண்டு களித்து கொண்டாடினர். வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வீரன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் வீரன் திரைப்படத்தின் ஒடிடி ரிலீஸ் தேதியை வெளியிட்டுள்ளது படக்குழு. அதன்படி வரும் ஜூன் 30ம் தேதி முதல் ஹிப் ஹாப் ஆதியின் வீரன் திரைப்படம் அமேசான் பிரைம் ஒடிடி தளத்தில் ஒளிப்பரபாகவுள்ளது. இந்த அறிவிப்பினை ரசிகர்கள் வெகுவாக பகிர்ந்து வைரலாக்கி வருகின்றனர்.

Our #Veeran has arrived with electrifying powers ⚡
will he be able to save his village from a technological threat? find out in this one-of-a-kind superhero fantasy comedy#VeeranOnPrime, June 30@PrimeVideoIN pic.twitter.com/VWnQw6tpya

— Sathya Jyothi Films (@SathyaJyothi) June 24, 2023

மேலும் இந்த அறிவிப்புடன் படத்தில் ஹிப் ஹாப் ஆதி இசையில் உருவான ‘வீரன் திருவிழா’ என்ற பாடலின் வீடியோவை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. பாடலாசிரியர் முத்தமிழ் வரிகளில் பின்னணி பாடகர்கள் சின்ன பொண்ணு, முத்து சிற்பி, பிரணவம் சசி ஆகியோருடன் இணைந்து ஹிப் ஹாப் ஆதி இப்பாடலை பாடியுள்ளார். தற்போது வெளியாகியுள்ள இப்பாடலின் வீடியோ ரசிகர்களால் வெகுவாக பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

வீரன் படத்தின் வெற்றியையடுத்து ஹிப்ஹாப் ஆதி விளையாட்டு ஆசிரியர் கதாபாத்திரத்தில் தற்போது PT Sir என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தினை தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் அவர்களின் வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிக்க இயக்குனர் கார்த்திக் வேணுகோபால் இயக்கி வருகிறார். மும்முரமாக படபிடிப்பு நடைபெற்று வரும் PT Sir திரைப்படம் இந்த ஆண்டு இறுதியில் இப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

'மாமன்னன்' படத்தில் வடிவேலு இணைந்தது இப்படிதான்..! உதயநிதி ஸ்டாலின் பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல்கள்.. - Exclusive interview உள்ளே..
சினிமா

'மாமன்னன்' படத்தில் வடிவேலு இணைந்தது இப்படிதான்..! உதயநிதி ஸ்டாலின் பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல்கள்.. - Exclusive interview உள்ளே..

துல்கர் சல்மானின் Pan India திரைப்படம்.. ‘கிங் ஆஃப் கோதா’ டீசர் அப்டேட்டினை வெளியிட்ட படக்குழு.. வீடியோ வைரல்..!
சினிமா

துல்கர் சல்மானின் Pan India திரைப்படம்.. ‘கிங் ஆஃப் கோதா’ டீசர் அப்டேட்டினை வெளியிட்ட படக்குழு.. வீடியோ வைரல்..!

 “இது ஒரு சீரியஸான விஷயம்...” இளைஞர்களுக்கு நடிகர் கார்த்தி அறிவுரை..!
சினிமா

“இது ஒரு சீரியஸான விஷயம்...” இளைஞர்களுக்கு நடிகர் கார்த்தி அறிவுரை..!