“இந்திராதான் இந்தியா..” ஜிவி பிரகாஷ் இசையில் கங்கனா ரனாவத்..! – எமர்ஜென்சி பட ரிலீஸ் தேதியுடன் வெளியான அட்டகாசமான வீடியோ உள்ளே..

கங்கனா ரனாவத் இயக்கும் எமேர்ஜன்சி டீசர் வெளியானது வைரல் வீடியோ உள்ளே - Kangana ranaut Emergency movie teaser out now | Galatta

தென்னிந்தியாவில் முன்னணி இசையமைப்பாளராகவும் நடிகராகவும் வலம் வருபவர் ஜிவி பிரகாஷ் குமார். விஜய், அஜித், ரஜினி போன்ற முன்னணி நட்சதிரங்களின் படங்களுக்கு இசையமைத்து தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வந்த ஜிவி பிரகாஷ் குமார். திரைப்படங்களில் நடிக்க தொடங்கி இன்று ரசிகர்கள் கொண்டாடும் இளம் நடிகராகவும் வளர்ந்து நிற்கிறார். அதன்படி தற்போது ஜிவி பிரகாஷ் குமார் ‘இடி முழக்கம்’, ‘அடியே’, ‘13’, ‘கள்வன்’, ‘டியர்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அதே நேரத்தில் தமிழ் சினிமாவில் வரவிருக்கும் மிக முக்கிய திரைப்படங்களுக்கு இசையமைத்தும் வருகிறார். அதன்படி பா ரஞ்சித் சியான் விக்ரம் கூட்டணியில் உருவாகும் ‘தங்கலான்’ படத்திற்கும் தனுஷ் நடிப்பில் உருவாகும் கேப்டன் மில்லர் படத்திற்கும் விஷால் , எஸ் ஜே சூர்யா நடித்துள்ள ‘மார்க் ஆண்டனி’ படத்திற்கும் கார்த்தி நடிப்பில் தீபாவளியில் வெளியாகவிருக்கும் ஜப்பான் படத்திற்கும் இசையமைக்கின்றார். தொடர்ந்து ஜெயம் ரவியின் ‘சைரன்’, சிவகார்த்திகேயனின் ‘SK21’, வெற்றிமாறமன் சூர்யா கூட்டணியில் ‘வாடிவாசல்’ போன்ற படங்களுக்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்து வருகிறார்.

தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு திரைத்துறையிலும் ஜிவி பிரகாஷ் குமார் முக்கிய நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

இதனிடையே ஜிவி பிரகாஷ் குமார் இந்தியில் இசையமைக்கும் திரைப்படம் ‘எமெர்ஜென்சி’. இந்தியாவின் இரும்பு பெண்மணி முன்னாள் பிரதமராக இருந்து மறைந்த இந்திரா காந்தி அவர்களின் ஆட்சி காலத்தில் நிகழ்ந்த நிகழ்வுகளை குறிப்பாக எமெர்ஜென்சி காலக் கட்டத்தை தழுவி உருவாகும் இப்படத்தில் இந்திரா காந்தியாக நடிகை கங்கனா ரனாவத் நடித்து வருகிறார். இப்படத்தினை நடிப்பது மட்டுமல்லாமல் தயாரித்து இயக்கியும் வருகிறார் கங்கனா ரனாவத். மணிகர்ணிகா பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் டெட்சு நகட்டா ஒளிப்பதிவு செய்ய படத்திற்கு ரிதேஷ் ஷா திரைக்கதை மற்றும் வசனம் எழுதியுள்ளார்.

இப்படத்தின் படபிடிப்பு கடந்த ஜனவரி மாதம் நிறைவடைந்தது. தர்போது படத்தின் இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி தற்போது படக்குழு வெளியிட்டுள்ளனர்.  இது குறித்து கங்கனா ரனாவத் பதிவிட்டுள்ள பதிவில்,

“பாதுகாவலரா அல்லது சர்வாதிகாரியா? நம் தேசத்தின் தலைவர் தன் மக்கள் மீதே போர் தொடுத்த நமது வரலாற்றின் இருண்ட காலகட்டத்தை காணுங்கள்” என்று குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார். தற்போது கங்கனா ரனாவத் அவர்களின் பதிவு இணையத்தில் ரசிகர்களால் வைரலாகி வருகிறது.

A protector or a Dictator? Witness the darkest phase of our history when the leader of our nation declared a war on it’s people.

🔗 https://t.co/oAs2nFWaRd#Emergency releasing worldwide on 24th November pic.twitter.com/ByDIfsQDM7

— Kangana Ranaut (@KanganaTeam) June 24, 2023

மேலும் படக்குழு வெளியிட்டுள்ள டீசரில் “இந்திரா என்றால் இந்தியா. இந்தியா என்றால் இந்திரா” என்ற வசனத்துடன் இந்திரா காந்தி போல் இருக்கும் கங்கனா ரனாவத் முதல் பார்வை வெலியாகியுள்ளது, மேலும் இதனுடன் எமர்ஜென்சி திரைப்படம வரும் நவம்பர் மாதம் 24 ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது. ஜிவி பிரகாஷ் இசையமைக்கும் மிக முக்கியமான திரைப்படங்களில் இதுவும் ஒன்று என்பதால் ரசிகர்கள் இப்படத்தின் முதல்பார்வையை வைரலாக்கி வருகின்றனர்.

 

நடிகை குஷ்பு மருத்துவமனையில் திடீர் அனுமதி.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!
சினிமா

நடிகை குஷ்பு மருத்துவமனையில் திடீர் அனுமதி.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

'மாமன்னன்' படத்தில் வடிவேலு இணைந்தது இப்படிதான்..! உதயநிதி ஸ்டாலின் பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல்கள்.. - Exclusive interview உள்ளே..
சினிமா

'மாமன்னன்' படத்தில் வடிவேலு இணைந்தது இப்படிதான்..! உதயநிதி ஸ்டாலின் பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல்கள்.. - Exclusive interview உள்ளே..

துல்கர் சல்மானின் Pan India திரைப்படம்.. ‘கிங் ஆஃப் கோதா’ டீசர் அப்டேட்டினை வெளியிட்ட படக்குழு.. வீடியோ வைரல்..!
சினிமா

துல்கர் சல்மானின் Pan India திரைப்படம்.. ‘கிங் ஆஃப் கோதா’ டீசர் அப்டேட்டினை வெளியிட்ட படக்குழு.. வீடியோ வைரல்..!