இசையமைப்பாளர், பாடகர், நடிகர், தயாரிப்பாளர், படத்தொகுப்பாளர் என பன்முகத்தன்மை கொண்ட கலைஞராக தமிழ் சினிமா ரசிகர்களை மகிழ்வித்து வரும் விஜய் ஆண்டனி நடிப்பில் அடுத்தடுத்து அக்னிச்சிறகுகள், காக்கி, தமிழரசன் உள்ளிட்ட திரைப்படங்கள் வரிசையாக ரிலீஸாக தயாராகி வருகின்றன.

அடுத்ததாக இயக்குனராகவும் அவதாரம் எடுத்துள்ள விஜய் ஆண்டனி பிச்சைக்காரன் 2 திரைப்படத்தை இயக்கி நடித்து வருகிறார். முன்னதாக ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான விஜய் மில்டன் இயக்கத்தில் மழை பிடிக்காத மனிதன் மற்றும் தமிழ் படம் பட இயக்குனர் C.S.அமுதன் இயக்கத்தில் ரத்தம் ஆகிய படங்களும் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளிவரவுள்ளன.

இநத வரிசையில் இயக்குனர் பாலாஜி.K.குமார் இயக்கத்தில் க்ரைம்-சஸ்பென்ஸ் த்ரில்லர் படமாக தயாராகியுள்ள கொலை திரைப்படத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ளார். ரித்திகா சிங் கதாநாயகியாக நடித்துள்ள கொலை படத்தில் ராதிகா சரத்குமார், மீனாக்ஷி சௌத்ரி, முரளி சர்மா, அர்ஜுன் சிதம்பரம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்சர்ஸ் மற்றும் லோட்டஸ் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ள கொலை படத்திற்கு சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவில், கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்துள்ளார். இந்நிலையில் கொலை திரைப்படத்தின் முதல் பாடலாக நீர் குமிழோ பாடல் தற்போது வெளியானது. அந்த பாடலை கீழே உள்ள லிங்கில் காணலாம்.