அடுத்தடுத்து வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து தரமான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களை மகிழ்வித்து வருபவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். அந்தவகையில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் அடுத்தடுத்து அட்டகாசமான திரைப்படங்கள் வெளிவர தயாராகி வருகின்றன. 

சீயான் விக்ரமுடன் துருவநட்சத்திரம், விஷ்ணு விஷால் உடன் மோகன்தாஸ், ஒரு நாள் கூத்து & மான்ஸ்டர் ஆகிய படங்களின் இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் ஃபர்ஹானா, ஆக்சன் கிங் அர்ஜுன் உடன் தீயவர் கொலைகள் நடுங்க மற்றும் SG.சார்லஸ் இயக்கத்தில் சொப்பன சுந்தரி ஆகிய படங்கள் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளிவர தயாராகி வருகின்றன. 

இதனிடையே  நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் ஆக்சன் த்ரில்லர் படமாக தயாராகி இருக்கும் டிரைவர் ஜமுனா திரைப்படம் வருகிற நவம்பர் 11ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. வத்திக்குச்சி படத்தின் இயக்குனர் கின்ஸ்லின் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருக்கும் டிரைவர் ஜமுனா திரைப்படத்தை 18 ரீல்ஸ்ஸ் சார்பில் S.P.சௌத்ரி தயாரித்துள்ளார். 

கோகுல் பெண்டி ஒளிப்பதிவில் ராமர் படத்தொகுப்பு செய்திருக்கும் டிரைவர் ஜமுனா படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இந்நிலையில் டிரைவர் ஜமுனா திரைப்படத்திலிருந்து ஆனந்த தவமே எனும் பாடல் தற்போது வெளியாகியுள்ளது. சமூகவலைதளங்களில் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ள அந்தப் பாடல் இதோ…