நயன்தாரா-விக்னேஷ் சிவனின் இரட்டை குழந்தைகள் விவகாரத்தில் சுகாதாரத்துறையின் அறிக்கை வெளியீடு!
By Anand S | Galatta | October 26, 2022 19:41 PM IST

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நாயகிகளில் ஒருவரான நடிகை நயன்தாரா மற்றும் குறிப்பிடப்படும் இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும் நீண்டகாலமாக காதலித்து வந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் இவர்களது திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. திருமணத்திற்கு பின் சமீபத்தில் இருவரும் தங்களது திரைப்பணிகளை மீண்டும் தொடங்கினர்.
அந்தவகையில் அடுத்ததாக நடிகர் அஜித் குமாரை இயக்கவிருக்கும் இயக்குனர் விக்னேஷ் சிவன், லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் #AK62 திரைப்படத்திற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறார். அதேபோல் நடிகை நயன்தாரா, இயக்குனர் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நடிக்கும் ஜவான் திரைப்படத்தின் மூலம் பாலிவுட் திரையுலகில் கதாநாயகியாக களமிறங்குகிறார்.
இதனிடையே கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் தம்பதியினர் வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்தனர். திருமணமான நான்கே மாதங்களில் இவர்களுக்கு வாடகை தாய் மூலம் குழந்தை பெறப்பட்டது குறித்து பலவிதமான சர்ச்சைகள் எழுந்தன. குறிப்பாக வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றதில் விதி மீறலில் ஈடுபட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின.
இதுகுறித்து தமிழக சுகாதாரத்துறை முறையான விசாரணை நடத்தப்படும் என அறிவித்த நிலையில் தற்போது அனைத்து விசாரணைகளையும் மேற்கொண்டு இறுதி அறிக்கையை வெளியிட்டுள்ளனர். அந்த அறிக்கையில், நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும் வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைகள் பெற்றதில் எந்த விதமான விதிமீறல்களும் இல்லை என திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த விளக்கமான முழு அறிக்கையை சுகாதாரத்துறை தற்போது வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கை இதோ…
#JUST_IN : நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியின் இரட்டை குழந்தை விவகாரம் தொடர்பான சுகாதாரத்துறையின் அறிக்கை வெளியானது..!
— Galatta Media (@galattadotcom) October 26, 2022
“இரட்டை குழந்தை விவகாரத்தில் விதி மீறவில்லை” என அறிக்கையில் தகவல்!#GalattaNews 📢@VigneshShivN #Nayanthara #vigneshshivan #NayantharaVigneshShivan pic.twitter.com/fvULgaRB9g