தாறுமாறாக பைக் ஓட்டி அசத்தும் கண்மணி சீரியல் நடிகை !
By Aravind Selvam | Galatta | February 02, 2021 08:30 AM IST
சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சூப்பர்ஹிட் தொடர்களில் ஒன்று கண்மணி.சஞ்சீவ் இந்த தொடரில் ஹீரோவாக நடித்திருந்தார்.கடந்த 2018 அக்டோபர் முதல் இந்த தொடர் ஒளிபரப்பாகி வந்தது.விறுவிறுப்பாக சென்று வந்த இந்த தொடர் சில மாதங்களுக்கு முன் நிறைவடைந்தது ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியது.
இந்த தொடரில் ஹீரோயினாக லீஷா எக்லர்ஸ் நடித்துள்ளார்.இவரது கேரக்டேருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமும் உருவாகியுள்ளது.இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ் ஆக இருக்கும் லீஷா அவ்வப்போது ஷூட்டிங் ஸ்பாட் வீடியோக்கள் உள்ளிட்டவற்றை ரசிகர்களுடன் பகிர்ந்துகொள்வார்.
நடனத்தில் ஆர்வம் கொண்ட லீஷா அவ்வப்போது தனது நடன வீடியோக்களையும் ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்வார்.அந்த வகையில் இவரது லேட்டஸ்ட் நடன வீடியோக்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தன.சீரியல் நிறைவடைந்த பிறகு வீடியோக்கள் எதுவும் பதிவிடாமல் இருந்தா லீஷா புத்தாண்டை முன்னிட்டு புதிய வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார்.இந்த வீடியோவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
இவரது இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டதாகவும் , தன்னுடைய புகைப்படங்கள் வீடியோக்கள் என்று அனைத்தும் நீக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்,புதிய மற்றும் பழைய வீடியோக்களை அவ்வப்போது அப்டேட் செய்வதாகவும் ரசிகர்களிடம் லீஷா தெரிவித்திருந்தார்.அதேபோல செய்தும் வந்தார்.இவரது பிறந்தநாள் சமீபத்தில் முடிந்தது அதற்காக கோவா சென்ற லீஷா சில வீடியோக்களை ரசிகர்களுடன் பகிர்ந்து வந்தார்.அந்த வகையில் பைக் ஓட்டும் வீடியோ ஒன்றை ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார் லீஷா.இந்த வீடியோ செம வைரலாகி வருகிறது.
Surprise announcement: Kutti Love Story to release in theatres | FL released
01/02/2021 07:00 PM
Karthi's Sulthan Official TEASER - Check Out | Rashmika Mandanna
01/02/2021 05:29 PM
Mohanlal announces new season of Bigg Boss - exciting promo teaser launched!
01/02/2021 05:00 PM