தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பொங்கலுக்கு வெளியாகி திரையரங்குகளில் வெற்றிநடை போட்டு வரும் திரைப்படம் மாஸ்டர்.மக்கள் செல்வன் விஜய்சேதுபதி இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.இந்த படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

அனிருத் ரவிச்சந்தர் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.மாளவிகா மோஹனன்,சாந்தனு,ரம்யா,கௌரி கிஷான்,ஸ்ரீமன்,சஞ்சீவ்,நாகேந்திர பிரசாத் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.XB பிலிம் கிரியேட்டர்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளனர்.இந்த படத்தை  Seven Screen ஸ்டுடியோ இணைந்து தயாரித்துள்ளனர்.

கொரோனா பாதிப்பை அடுத்து வெளியான முதல் பெரிய ஹீரோ படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.50% பார்வையாளர்களுடன் வெளியாகி இந்த படம் பல இடங்களில் வசூல் சாதனை நிகழ்த்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.இந்த படம் சில இடங்களில் வெளியிடப்படாததால் இந்த படத்தினை சில நாட்களுக்கு முன் OTT-யிலும் படக்குழுவினர் வெளியிட்டனர்.

பலரது பாராட்டுகளையும் இந்த படம் பெற்று வருகிறது.குறிப்பாக இதுபோன்ற நேரத்தில் திரையரங்கிற்கு ரசிகர்களை வரவைத்த திரைப்படம் மாஸ்டர் என்று பலரும் பாராட்டி வருகின்றனர்.இந்த படத்தில் நடித்த பலரையும் ரசிகர்களும் விமர்சகர்களும் பிரபலங்களும் பாராட்டி வருகின்றனர்.

தற்போது இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த சிபி மற்றும் கௌரி இருவரையும் சிவகார்த்திகேயன் நேரில் சந்தித்து தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.இந்த புகைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.சிவகார்த்திகேயன் நடிக்கும் அடுத்த படம் கல்லூரியை சம்மந்தப்படுத்தி எடுக்கப்படவுள்ள நிலையில் இந்த இருவரும் அந்த படத்திலும் நடிக்க வாய்ப்பிருப்பது இந்த புகைப்படத்தை மூலம் தெரிகிறது.