இந்தியாவின் சிறந்த நடிகர்களில் ஒருவர் உலகநாயகன் கமல்ஹாசன்,தற்போதுள்ள பல நடிகர்களின் முன்னுதாரணமாக பல வருடங்களாக திகழ்ந்து வருகிறார்.தனது நடிப்பின் மூலமும்,வித்தியாசமான திரைப்படங்கள் மூலமும் மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்து விட்டார் கமல்ஹாசன்.

திரைப்படங்களை தவிர தன்னால் முடிந்த சமூகஅக்கறை கொண்ட காரியங்களையும் கமல் அவ்வப்போது செய்து வருவார்.சில வருடங்களுக்கு முன் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கி அதன் மூலம் தமிழக மக்களுக்கு சேவை செய்ய அயராது உழைத்து வருகிறார்.

அரசியலில் பிஸியாக இருந்தாலும் தனது ரசிகர்களுக்காக அவ்வப்போது படங்களிலும் நடித்து வருகிறார்.அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகி வரும் விக்ரம் படத்தில் நடித்து வருகிறார்.இவற்றை தவிர விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறார் கமல்ஹாசன்.

சில நாட்களுக்கு முன்னர் கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.தற்போது பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்,இதுகுறித்த ஒரு அறிக்கையை கமல் வெளியிட்டுள்ளார்.தன் உடல்நிலை சரியாகவேண்டும் என்று பிரார்த்தனை செய்த அனைவருக்கும் மிக்க நன்றி எனது அன்றாட பணிகளை இன்று  முதல் தொடங்கவுதாகவும் தெரிவித்துள்ளார்.