தனக்கே உரித்தான பாணியில் தொடர்ந்து அதிரடி ஆக்சன் திரைப்படங்களில் நடித்து வருபவர் நடிகர் அருண் விஜய். முன்னதாக மூடர்கூடம் படத்தின் இயக்குனர் நவீன் இயக்கத்தில் அருண் விஜய் மற்றும் விஜய் ஆண்டனி இணைந்து நடித்துள்ள அக்னிச்சிறகுகள் திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியான நிலையில், விரைவில் திரைப்படம் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்ந்து பார்டர், சினம், பாக்சர் உள்ளிட்ட திரைப்படங்கள் அருண் விஜய் நடிப்பில் அடுத்தடுத்து வெளிவர உள்ள நிலையில், தற்போது இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் புதிய வெப்சீரிஸில் நடித்து வருகிறார். இந்த வரிசையில் முன்னணி கமர்ஷியல் இயக்குனர் ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள திரைப்படம் யானை.

டிரம்ஸ்டிக்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் அதிரடியான ஃபேமிலி என்டர்டெய்னர் திரைப்படமாக தயாராகியிருக்கும் யானை திரைப்படத்தில் பிரியா பவானி சங்கர், ராதிகா சரத்குமார், சமுத்திரகனி, யோகிபாபு, அம்மு அபிராமி மற்றும் விஜய் டிவி புகழ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். யானை திரைபடத்திற்கு ஜீவி பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.

யானை திரைப்படம் வருகிற ஜூன் 17-ம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் அருண் விஜய்யின் யானை திரைப்படத்தின் அதிரடியான ட்ரைலர் தற்போது வெளியானது. சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் யானை படத்தின் ட்ரைலரை கீழே உள்ள லிங்கில் காணலாம்.