மனைவி - மகள் என யாரையும் விட்டு வைக்காமல், வீடு புகுந்து ஒரு கும்பல், இரும்பு கம்பி உள்ளிடட ஆயுதங்களால் பெண்களை தாக்கும் சிசிடிவ காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருவள்ளூரில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது. அதுவும், முன்விரோதம் காரணமாக வீடு புகுந்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

திருவள்ளூர் மாவட்டம் கொண்டஞ்சேரியைச் சேர்ந்த தாஸ் என்பவருக்கும், அந்த பகுதியில் உள்ள கூவம் பகுதியைச் சேர்ந்த சார்லஸ் என்பவருக்கும் ஏற்கெனவே முன்விரோதம் இருந்ததாக தெரிய வருகிறது. இதனால், அவர்களுக்கும் சில நேரங்களில் வாய் தகராறு ஏற்படும் என்றும் கூறப்படுகிறது.

இந்த சூழலில் தான், சார்லஸ் தனது மனைவி, மகள், மகனுடன் இரவில் தனது வீட்டில் உறங்கிக்கொண்டு இருந்து உள்ளார்.

அப்பாடியான சூழலில் தான், நள்ளிரவு நேரத்தில் முன் விரோதம் காரணமாக, சார்லஸ் வீட்டிற்கு தனது ஆட்களுடன் வந்த தாஸின் தரப்பு ஆட்கள், சார்லஸின் வீட்டுக்குள் புகுந்து அதிரடியான தாக்குதலை நடத்தி உள்ளனர்.

அப்போது, சார்லஸின் வீடு மற்றும் அவரது பொருட்களை மட்டுமல்லாமல், வீட்டில் இருந்த சார்லஸ், அவரது மனைவி விக்டோரியா, மகள் சவிதா மற்றும் மகன் சாருகேஷ் ஆகியோரையும் அந்த கும்பல் அந்த நள்ளிரவு நேரத்தில் இரும்பு கம்பி மற்றும் கையில் கிடைத்த கட்டைகளால் சரமாரியாக தாக்கி உள்ளனர்.

இதனால், பதறிப்போன சார்லஸின் மகன் அந்த நள்ளிரவு நேரத்தில் போலீசாருக்கு போன் செய்கிறார். ஆனாலும், அப்படியும் விட்டாத அந்த கும்பல் அவரையும் தாக்கி உள்ளனர். இதனால், அந்த குடும்பத்தில் அனைவருக்கும் மண்டை உடைந்து ரத்தம் சொட்ட சொட்ட அவர்கள் பீதியில் உரைந்தனர்.

மேலும், தலையில் பலத்த காயம் அடைந்த சார்லஸின் மனைவி விக்டோரியா, மகள் சவிதா ஆகியோர் திருவள்ளூர் தலைமை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அத்துடன், இந்த கொடூர தாக்குதல் சம்பவம் குறித்து சார்லஸின் சகோதரர், அங்குள்ள சத்தியமூர்த்தி மப்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், இந்த சம்பவம் குறித்து உடனடியாக சம்ப இடத்திற்கு விரைந்து வந்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். எனினும், தாக்குதல் நடத்திய தாஸ் மற்றும் அவருடன் வந்த அவரது ஆதரவாளர்கள் தற்போது தலைமறைவாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதனிடையே, இரவு நேரத்தில் வீட்டு பெண்கள் மீது கொடூரமான முறையில் தாக்குதல் நடத்திய சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி, அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.