தனது மனைவி உடன் பாலியல் இன்பத்தில் ஈடுபட்டிருந்த கணவனுக்கு அடுத்த 10 நிமிடத்தில் ஞாபக மறதி ஏற்பட்டுள்ள சம்பவம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஒருவர்தான், பாலியல் இன்பத்தில் ஈடுபடும் போது தனது ஞாபக சக்தியை இழந்து உள்ளார்.

அதாவது, அயர்லாந்தை சேர்ந்த 66 வயது நபர் ஒருவர், தனது மனைவியுடன் வாழ்ந்து வந்த நிலையில், சம்பவத்தன்று அவர் தனது மனைவியுடன் பாலியல் உறவில் ஈடுபட்டு இருக்கிறார்.

அப்போது, அந்த 66 வயது நபர், பாலியல் உறவு கொண்ட அடுத்த 10 வது நிமிடத்தில், அவர் தனது செல்போனை எடுத்து பார்த்திருக்கிறார்.

அப்போது, அந்த செல்போனில் உள்ள தேதியைப் பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்து உள்ளார்.

இதனால், அந்த பாலியல் உறவிலிருந்து பாதியிலேயே எழுந்த அந்த நபர், கடும் வருத்தத்துடன், தனிமையில் சோகமாக சென்று அமர்ந்து உள்ளார்.

கணவனின் இந்த நடடிக்கையால், சற்று சந்தேகம் அடைந்த அந்த மனைவி, “என்னாச்சு?” என்று, தனது கணவனிடம் விசாரித்து உள்ளார்.

“நேற்று, நமக்கு திருமண நாள் என்பதையே நான் மறந்து போனேன் என்றும், எனது ஞாபக மறதியால், நமது திருமண நாளை கூட நான் கொண்டாட முடியாமல் போனது எனக்கு வருத்தமாக உள்ளது” என்று, பதில் அளித்திருக்கிறார். 

இப்படியாக, அந்த கணவனின் பேச்சை கேட்டு கடும் அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி, இது குறித்து தனது மகளை அழைத்து தந்தையின் இப்படியான செயல்பாடுகள் குறித்தும், அவர் சொன்னதும் குறித்தும் தனது மகளிடம் கூறியிருலக்கிறார். இதனால், சற்று அதிர்ச்சி அடைந்த அவர்கள், அவரிடம் ஏதேதோ பேசி அவரை சமாதானம் கூறி உள்ளனர். ஆனால், அவர் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை.

அதாவது, முதல் நாள் மாலையில் தான், இந்த தம்பதியினர் குடும்பத்துடன் சேர்ந்து திருமண நாளை கொண்டாடி தீர்த்து உள்ளனர். ஆனால், இந்த கொண்டாட்டங்கள் யாவரையும் அந்த நபர் இந்த பாலியல் இன்பத்தின் போது முற்றிலுமாக மறைந்து, தனது ஞாபக சக்தியையும் அவர் இழந்தது தெரிய வந்தது.

இதனையடுத்து, அவரது மனைவி உடனடியாக அங்குள்ள ஒரு மருத்துவமனையில் தனது கணவனை அனுமதித்து உள்ளார்.

அங்கு, அந்த கணவனுக்கு நரப்பியல் பரிசோதனை நடத்தப்பட்டது. 

இந்த மருத்துவ பரிசோதனையின்போது தான், அந்த கணவனுக்கு “Transient Global Amnesia (ட்ரான்சிட் க்ளோபல் அம்னீசியா) என்ற குறுகிய கால ஞாபக மறதி நோய் ஏற்பட்டு உள்ளது தெரிய வந்திருக்கிறது.

குறிப்பாக, இந்த அரிய வகையிலான நோயானது, சுமார் 50 வயது முதல் 70 வயதுக்கு உட்பட்டவர்கள் இடையே தான் பெரும்பாலும் வரும் என்றும், இந்த 66 வயது நபருக்கு ஏற்கனவே இது போன்ற சம்பவம் ஏற்பட்டு உள்ளதும் தெரிய வந்திருக்கிறது.

அதன்படி, கடந்த 2015 ஆம் ஆண்டில் இதே போல் மனைவியிடம் உடலுறவு கொண்ட அடுத்த சில நிமிடங்களில், அவருக்கு குறுகிய கால ஞாபக மறதி நோய் ஏற்பட்ட நிலையில், அது அடுத்த சில மணி நேரத்திலேய சரியாகி உள்ளதும் தெரிய வந்திருக்கிறது. தற்போது, அவருக்கு தொடர்ந்து சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இச்சம்பவம், அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.