தமிழ் திரை உலகின் நட்சத்திர இயக்குனராக வலம் வரும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களின் தீவிர ரசிகர் ஆவார். இந்த நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் நடித்துள்ள விக்ரம் திரைப்படம் நாளை ஜூன் 3ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகிறது.

பக்கா அதிரடி ஆக்சன் ப்ளாக் திரைப்படமாக உருவாகியிருக்கும் விக்ரம் திரைப்படம் கட்டாயமாக லோகேஷ் கனகராஜின் FAN BOY சம்பவமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ள விக்ரம் திரைப்படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

உலக நாயகனுடன் இணைந்து மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் ஃபகத் பாசில் இணைந்து முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் விக்ரம் திரைப்படத்திற்கு கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவில், ஃபிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்ய, அனிருத் இசையமைக்க அன்பறிவு மாஸ்டர்ஸ் ஸ்டண்ட் இயக்குனராக பணியாற்றியுள்ளனர்.

ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் விக்ரம் படத்தின் ப்ரமோஷன் பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், தற்போது துபாயில் உள்ள உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் காலிஃபா விக்ரம் திரைப்படத்தின் ப்ரோமோ திரையிடப்பட்டது. புர்ஜ் காலிஃபாவின் விக்ரம் ப்ரோமோ திரையிடப்பட்ட வீடியோ இதோ…