தென்னிந்திய சினிமாவின் பிரபல இளம் கதாநாயகியாக வலம் வரும் நடிகை கல்யாணி பிரியதர்ஷன் தமிழில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்த ஹீரோ திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து சிலம்பரசன்.TR நடிப்பில் வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட்டான மாநாடு படத்திலும் கதாநாயகியாக நடித்தார்.

குறிப்பாக மலையாளத்தில் வரானே ஆவஷ்யமுண்டு, மரக்கார்-அரபிக்கடலிண்டே சிம்ஹம், ஹிரிதயம், ப்ரோ டாடி, தள்ளுமால ஆகிய படங்களில் அனைவரது கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்தார். இந்த வரிசையில் அடுத்ததாக மலையாளத்தில் நடிகை கல்யாணி பிரியதர்ஷன் கதாநாயகியாக நடிக்கும் திரைப்படம் ஷேஷம் மைக்கில் ஃபாத்திமா.

தளபதி விஜயின் மேலாளரும் மாஸ்டர் திரைப்படத்தின் இணை தயாரிப்பாளருமான திரு.ஜெகதீஷ் அவர்கள் தயாரிப்பாளராக தனது முதல் படமாக ஷேஷம் மைக்கில் ஃபாத்திமா திரைப்படத்தை தயாரிக்கிறார். இயக்குனர் மனோ.C.குமார் எழுதி இயக்கும் ஷேஷம் மைக்கில் ஃபாத்திமா திரைப்படத்தை தயாரிப்பாளர் ஜெகதீஷின் The Route மற்றும் தயாரிப்பாளர் சுதன் சுந்தரத்தின் PASSION STUDIOS இணைந்து தயாரிக்கின்றன. 

சந்தான கிருஷ்ணன் ஒளிப்பதிவில், கிரண் தாஸ் படத்தொகுப்பு செய்யும், ஷேஷம் மைக்கில் பாத்திமா திரைப்படத்திற்கு ஹேஷம் அப்துல் வாஹாப் இசையமைக்கிறார். கலகலப்பான ஃபேமிலி என்டர்டெய்னர் திரைப்படமாக தயாராக இருக்கும் ஷேஷம் மைக்கில் ஃபாத்திமா திரைப்படத்தின் டிஜிட்டல் உரிமையை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. 

முன்னதாக (நேற்று) ஷேஷம் மைக்கில் ஃபாத்திமா திரைப்படத்தின் அறிவிப்பும், டைட்டில் போஸ்டரும் வெளியானது. அதனைத் தொடர்ந்து இன்று (செப்டம்பர் 12ஆம் தேதி) ஷேஷம் மைக்கில் ஃபாத்திமா திரைப்படத்தின் படப்பூஜை நடைப்பெற்றுள்ளது. வரும் செப்டம்பர் 14 முதல் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஷேஷம் மைக்கில் ஃபாத்திமா படப்பூஜை புகைப்படங்கள் இதோ…

 

Sesham Mike-il Fathima Poojai ✨

Shoot commences from Sept 14th.@kalyanipriyan @Jagadishbliss @Sudhans2017 @manuckumar4 @HeshamAWMusic @dop_santha #KiranDas #NimeshThanoor @Aiish_suresh #RenjithNair @PassionStudios_ @yellowtooths @propratheesh #SeshamMikeilFathima pic.twitter.com/QDUYfJ30Ni

— TheRoute (@TheRoute) September 12, 2022

Sesham Mike-il Fathima Poojai ✨

Shoot commences from Sept 14th.@kalyanipriyan @Jagadishbliss @Sudhans2017 @manuckumar4 @HeshamAWMusic @dop_santha #KiranDas #NimeshThanoor @Aiish_suresh #RenjithNair @PassionStudios_ @yellowtooths @propratheesh #SeshamMikeilFathima pic.twitter.com/IPezYV2AVx

— TheRoute (@TheRoute) September 12, 2022