இந்திய அளவில் முன்னணி சினிமா நட்சத்திரங்களில் ஒருவராகவும் பல கோடி சினிமா ரசிகர்களின் ஃபேவரட் ஹீரோவாகவும் விளங்கும் நடிகர் அஜித்குமார் தற்போது இயக்குனர் H.வினோத் இயக்கத்தில் AK61 திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். முதல்முறையாக அஜித் குமாருடன் இணைந்து மலையாள நடிகை மஞ்சு வாரியர் AK61 திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்.

சதுரங்க வேட்டை மற்றும் தீரன் அதிகாரம் ஒன்று ஆகிய திரைப்படங்களின் மூலம் கவனத்தை ஈர்த்த இயக்குனர் H.வினோத் தனது மூன்றாவது படமாக நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித் குமாருடன் இணைந்தார். தொடர்ந்து அதிரடி ஆக்ஷன் திரில்லர் படமாக மீண்டும் அஜித்துடன் இணைந்த இயக்குனர் H.வினோத் வலிமை படத்தை இயக்கினார்.

பக்கா ஆக்ஷன் ப்ளாக் படமாக ஹிட்டடித்த வலிமை படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது வரிசையாக 3-வது முறையாக அஜித் குமார் நடிக்கும் AK61 திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தையும் தயாரிப்பாளர் போனி கபூர் தனது பேவியூ பிராஜக்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கிறார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட AK61 படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. இதனை அடுத்து லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் AK62 படத்தில் அஜித்குமார் நடிக்க உள்ளார். முதல்முறை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித்குமார் நடிக்கும் AK62 படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். 

இதனிடையே தொடர்ந்து தனது பைக் ரைடிங்களிலும் கவனம் செலுத்திவரும் அஜித்குமார் இந்தியாவின் வட எல்லை பகுதிகளில் தனது பைக் ரைடிங்கை தொடர்ந்து வருகிறார். அந்தவகையில் அஜித்குமாரின் ஸ்டைலான புதிய பைக் ரைடிங் புகைப்படங்களை திரு.சுரேஷ் சந்திரா அவர்கள் தற்போது பகிர்ந்துள்ளார். சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வரும் அந்த புகைப்படங்கள் இதோ…
 

Man and the machine!!! pic.twitter.com/OgIU6OyDQ0

— Suresh Chandra (@SureshChandraa) September 12, 2022