தமிழ் திரை உலகின் காமெடி ஜாம்பவானாக, பலகோடி தமிழ் உள்ளங்களில் நகைச்சுவை மன்னனாக திகழும் வைகைப்புயல் வடிவேலு தனது திரைப்பயணத்தில் இரண்டாவது இன்னிங்சை தொடங்கியுள்ளார். அந்த வகையில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன் திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் வடிவேலு நடித்து வருகிறார்.

வடிவேலு உடன் இணைந்து ஃபகத் பாசில், உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ் இணைந்து நடிக்கும் மாமன்னன் திரைப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக தனது ஃபேவரட் கதாபாத்திரமான நாய் சேகர் கதாபாத்திரத்தின் பெயரை கொண்டு பக்கா காமெடி என்டர்டெய்னராக வைகைபுயல் வடிவேலு நடிக்கும் திரைப்படம் நாய் சேகர் ரிட்டன்ஸ்.

இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் உருவாகும் நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படத்தில் வைகை புயல் வடிவேலுவுடன் இணைந்து நகைச்சுவை நடிகர் ரெட்டின் கிங்ஸ்லி, விஜய் டிவி சிவாங்கி, நடிகர் ஆனந்தராஜ், ஷிவானி நாராயணன் மற்றும் VJ விக்னேஷ் காந்த் ஆகியோர் நடிக்கின்றனர். விக்னேஷ் வாசு ஒளிப்பதிவில், செல்வா.RK படண்தொகுப்பு செய்யும், நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படத்தில் நீண்ட இடைவெளிக்கு பின் வடிவேலு ஒரு பாடலை பாடியுள்ளார். மேலும் நடனப்புயல் பிரபு தேவா இப்படத்தில் நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார். இந்நிலையில் நாளை செப்டம்பர் 13-ஆம் தேதி பிறந்த நாள் கொண்டாடும் வைகைப்புயல் வடிவேலுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கும் வகையில் நாய் சேகர் ரிட்டன்ஸ் படக்குழுவினர் அட்டகாசமான போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அந்த போஸ்டர் இதோ…
 

Wishing the Comedy Icon Vaigai Puyal #Vadivelu a very Happy Birthday! 🎂🥳 Have a fabulous year ahead!🤗#HBDVadivelu #NaaiSekarReturns 🐶💯 ORIGINAL ✨ pic.twitter.com/A8q599PqiB

— Lyca Productions (@LycaProductions) September 12, 2022