தமிழ் சினிமாவுல காமெடி நடிகர்கள்ன்னு யாரை கேட்டாலும் எல்லாரும் யோசிக்காம சொல்ற ஒரு முக்கிய பெயர் வைகை புயல் வடிவேலு தான்.நம்ம வாழ்க்கைல நடக்குற எந்த சூழ்நிலையா இருந்தாலும் அது எல்லாத்துக்கும் நம்ம பேசுறதுக்கு நம்ம கொண்டாடுறதுக்கு நம்ம உணர்வுகளை வெளிப்படுத்துறதுக்கு  ஒருத்தர் இருப்பாருன்னா அது நம்ம வைகை புயல் வடிவேலு தான்.

டிவி பார்க்குற காலத்துல இருந்து இப்போ இருக்குற மீம் உலகம் வரைக்கும் ஏன் இன்னும் அடுத்து வர ஜெனெரேஷனுக்கும் வடிவேலு பல Content-களை அள்ளி கொடுத்துருக்கிறாரு.இடையில சில காரணங்களால அவர் சில வருடங்கள் நடிக்காம இருந்தாலும் அவருக்கான Craze மக்கள் மத்தியில குறையாமலேயே தான் இருந்தது.

ஒரு சில வருடங்கள் பிரேக் எடுத்த அப்பறம் இப்போ நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்,மாமன்னன்,சந்திரமுகி 2 அதோட இன்னும் சில படங்களையும் நடிச்சு அசத்திட்டு இருக்காரு நம்ம வைகை புயல் வடிவேலு.இன்னைக்கு அவரோட 62ஆவது வயசுல அடியெடுத்து வைக்கிறாரு,அதுல 30 ஆண்டுகள் சினிமாவுல இருந்து நம்மள ரசிக்க வெச்சுருக்காரு.

நம்ம டெய்லி வாழ்க்கைல யூஸ் பண்ற விஷயங்கள்லயே பல வடிவேலு டயலாக்கள் நம்மள அறியாமல் வந்துரும்.அப்படி பல விஷயங்களை அவர் நம்மள Entertain பண்ண செஞ்சுருந்தாலும் அதுல நிறைய வாழ்க்கைக்கு தேவையான தத்துவங்களும் சொல்லிருக்காரு.

அப்படி அவர் நடிச்ச படங்கள்ல வந்த சில டயலாக் தேர்ந்தெடுத்து ஒரு தொகுப்பா சொல்லிருக்கோம் , வடிவேலு டயலாக் லிஸ்ட் போட்டா அதுக்கு எண்டே கிடையாது அப்படிங்கறதால ஒரு 12 டயலாக் இங்க எடுத்து சொல்லிருக்கோம் என்னென்ன என்ன Situation அப்ப்டிங்கிறத பாருங்க 

'எது பண்ணாலும் பிளான் பண்ணி பண்ணனும்'

வாழ்க்கைல எந்த விஷயமா இருந்தாலும் திட்டம் போடாம செஞ்சோம்னா செமயா அடி வாங்குவோம் அப்டிங்கிறத சூப்பரா உணர்த்துறது போல இந்த டயலாகும் இந்த காட்சியும் அமைஞ்சுருக்கும்.

'த்ரிஷா இல்லனா நயன்தாரா'

பலருக்கும் வாழ்கையில இருக்குற முக்கிய பிரச்சனை காதல் தோல்வி தான். பலரும் அப்படிப்பட்ட சூழ்நிலைகள்ல மனசு உடைஞ்சு Depression-ல போய்டுறாங்க, ஆனா அப்படி இல்ல ஒண்ணு போன இன்னொன்னு Better-ஆ வரும்ன்னு உணர்த்தும் இந்த வசனம்.

'நம்ம எது பண்ணாலும் இந்த உலகம் நம்மள உத்து பார்க்கணும்'

நம்ம பெரிய வேலைல இருக்கலாம் இல்ல சின்ன வேலைல இருக்கலாம் ஆன நம்ம இருக்க இடத்துல இப்படி ஒருத்தன் வேலை பார்த்தான்னு எல்லாருமே பேச வைக்கணும் ஒரு பெரிய தத்துவத்தை ரொம்ப ஜாலியா நமக்கு சொல்லுது இந்த வசனம்.

'அடிச்சான் பாரு Appointment ஆர்டர்'

பல நாளா நமக்கு வேலை கிடைக்காம இருந்துருக்கும். நம்ம சொந்தகாரனுங்க எல்லாம் நம்மள ரொம்ப அசிங்கப்படுத்திருப்பானுங்க. அந்த கஷ்டத்தெல்லாம் தாண்டி ஒரு நல்ல வேலையோட அவங்க முன்னாடி கெத்தா அடிச்சான் பாரு Appointment ஆர்டர்ன்னு சொல்லுற ஒரு Feel இந்த டயலாக் கொடுத்திருக்கும்

'வட போச்சே'

வாழ்க்கைல நம்ம நினைக்கிற, ஆசைப்படுற எல்லா விஷயமும் நடந்துறாது. அப்படி சில விஷயங்கள் நம்ம கைக்கு கிடைக்காம போயிடுச்சுன்னா வடை போச்சேன்னு Casual-ஆ எடுத்துக்கணும்னு ஒரு சூப்பர் கருத்தை முன் வைக்குது இந்த டயலாக். 

'வாழ்க்கைன்னா சில அடிகள் விழத்தான் செய்யும்'

எல்லாரோட வாழ்க்கையும் ஜாலியா சந்தோஷமா எப்பயுமே இருக்காது. எல்லாருக்குமே சில கஷ்டங்கள் இருக்கும். அதையெல்லாம் கொஞ்சம் பொறுத்துகிட்டு கடந்து போகணும். அதுக்கு அப்பறம் வாழ்க்கை நல்லாருக்கும்ன்னு இந்த டயலாக் உணர்த்தும்.

'ரிஸ்க் எடுக்குறதெல்லாம் எனக்கு ரஸ்க் சாப்புட்ற மாதிரி'

சில நேரங்கள்ல சில விஷயங்கள்ல நம்ம ரிஸ்க் எடுத்து தான் ஆகணும். அப்போதான் அந்த வெற்றி கிடைக்கும். அதுக்காக துணிஞ்சு ரிஸ்க் எடுக்கணும்னு சொல்லுது இந்த வசனம்.

'நம்ம யார் வம்புக்கு போறதில்ல நம்ம உண்டு நம்ம வேலை உண்டுன்னு இருந்துறது'

நம்ம வாழ்கையிலேயே 1008 பிரச்சனை இருக்கும். இதுல அடுத்தவனுக்கு உதவி பன்றேன்னு போய் வேற பிரச்னையை எடுத்துட்டு வரக்கூடாது. நம்ம வேலையை மட்டும் பார்க்கணும்ன்னு இந்த வசனம் உணர்த்துது.

'Money Comes Today Goes Tomorrow ya'

எல்லாருக்குமே வாழ்க்கைல பணம் தேவை தான். அதுக்காக பணம் மட்டுமே வாழ்க்கை ஆகிடாது. இணைக்கு இல்லாட்டியும் என்னைக்காவது ஒரு நாள் பணம் சம்பாரிக்கலாம் என்ற அற்புதமான கருத்தை இந்த வசனம் உணர்த்துது.

'சண்டைனா சட்டை கிழிய தான் செய்யும்'

ஒரு கட்டத்துல ஒரு சில இடத்துல தைரியமா சண்டை போட்டு தான் ஆகணும். அப்படி இடங்கள்ல தைரியமா களமிறங்கணும்ன்னு இந்த வசனம் எடுத்து சொல்லுது.

'அது போன மாசம் இது இந்த மாசம்'

எல்லாருமே எல்லா நேரத்துலயுமே Perfect-ஆ இருப்போம்ன்னு சொல்ல முடியாது. அப்படி சில நல்ல விஷயங்கள் நம்ம கையில் எடுக்கணும், கேட்ட விஷயங்களை விட்றணும்னு சொல்றது தான் இந்த வசனம்

'மறுபடியும் முதல்ல இருந்தா'

வாழ்க்கைல சில விஷயங்கள் நம்ம திரும்ப திரும்ப ட்ரை பண்ற மாதிரி தான் இருக்கும். என்னதான் அதுல சுவாரசியம் இல்லாட்டியும் நம்ம முயற்சி பண்ணா சில விஷயங்களை மாத்த முடியும்னு சொல்றது தான் இந்த வசனம்.

இதைத்தவிர இன்னும் பல வசனங்கள் பல எடுத்துக்காட்டுகள் இருக்கு , நம்ம வைகைப்புயல் இன்னும் பல ஆண்டுகளுக்கு நம்மளை மகிழ்விச்சுட்டே இருக்கணும் அதுதான் தமிழ் சினிமா ரசிகர்களோடு விருப்பம்.மீண்டும் ஒரு முறை வடிவேலுவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கலாட்டா சார்பாக தெரிவித்து கொள்கிறோம்