தமிழ் திரை உலகின் பிரபல இளம் கதாநாயகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் காளிதாஸ் ஜெயராம் சமீபத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடித்து வெளிவந்த மெகா ஹிட்டான விக்ரம் திரைப்டத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இதனை அடுத்து முன்னணி இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் காளிதாஸ் ஜெயராம் நடித்துள்ள நட்சத்திரம் நகர்கிறது திரைப்படத்தின் இறுதிகட்ட பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்த வரிசையில் அடுத்ததாக வெப் சீரிஸில் களமிறங்கியுள்ள காளிதாஸ் ஜெயராம் நடிப்பில் வெளிவரவுள்ள வெப் சீரிஸ் பேப்பர் ராக்கெட்.

இயக்குனர் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் காளிதாஸ் ஜெயராம், தான்யா ரவிச்சந்திரன், ரேணுகா, கௌரி கிஷன், கருணாகரன் நிர்மல் பழனி டி ராஜ் சின்னி ஜெயந்த் காளி வெங்கட் பூர்ணிமா பாக்யராஜ் GM.குமார் அபிஷேக் பிரியதர்ஷினி ஆகியோர் இணைந்து பேப்பர் ராக்கெட் வெப் சீரிஸில்ல் முன்னணி வேடங்களில் நடித்துள்ளனர்.

ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள பேப்பர் ராக்கெட் வெப் சீரிஸ் விரைவில் ஜி5 ஒரிஜினல் OTT தளத்தில் நேரடியாக ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டது. ரிச்சர்ட்.M.நாதன் ஒளிப்பதிவில் பேப்பர் ராக்கெட் வெப் சீரிஸுக்கு லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பு செய்துள்ளார்.

மேலும் பேப்பர் ராக்கெட் வெப் சீரிஸுக்கு சைமன்.K.கிங், வேதங்கள் மற்றும் தரண் குமார் ஆகிய 3 இசையமைப்பாளர்கள் இசையமைத்துள்ளனர். இந்நிலையில் கிருத்திகா உதயநிதியின் பேப்பர் ராக்கெட் வெப்சீரிஸ் வருகிற ஜூன் 29-ம் தேதி முதல் ZEE5 தளத்தில் ஒளிபரப்பாகும் என தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

And here's the big announcement, Paper Rocket directed by @astrokiru will be premiering on the 29th of July exclusively on ZEE5.
.#PaperRocket premiering on July 29th on ZEE 5!#ZEE5 #ZEE5tamil #PaperRocket #PaperRocketOnZEE5 pic.twitter.com/Q6QlLG2It5

— ZEE5 Tamil (@ZEE5Tamil) July 19, 2022