கடந்த சில ஆண்டுகளாக OTT தளங்களின் வருகைக்குப் பிறகு தொடர்ந்து தமிழ் ரசிகர்கள் விரும்பும் வகையில் பாவக் கதைகள், நவரசா போன்ற ஆந்தாலஜி படங்கள் & சீரிஸ்கள் வெளிவந்து ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தன. அந்த வகையில் தற்போது அடுத்த ஆந்தாலஜி திரைப்படமாக வெளிவருகிறது விக்டிம்.

தமிழ் திரை உலகின் முன்னணி இயக்குனர்களான சிம்புதேவன், பா.ரஞ்சித், ராஜேஷ்.M, வெங்கட்பிரபு ஆகிய நான்கு இயக்குனர்களின் இயக்கத்தில் கொட்டைப்பாக்கு வத்தலும் மொட்டைமாடி சித்தரும், தம்மம், மிர்ரேஜ், கன்ஃபெஸன் ஆகிய நான்கு எபிசோடுகளை கொண்ட ஆந்தாலஜி படமாக விக்டிம் தயாராகியுள்ளது.

AXESS FILM FACTORY மற்றும் BLACK TICKET COMPANY இணைந்து தயாரித்துள்ள விக்டிம் படத்தில் அமலா பால், பிரியா பவானி ஷங்கர், தம்பிராமையா, நாசர், நட்ராஜ்(நட்டி), குரு சோமசுந்தரம், பிரசன்னா, கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சாம்.CS பிரேம்ஜி, கனேஷ் சேகர், தென்மா ஆகியோர் இசையமைத்துள்ளனர்.

R.சரவணன், சக்தி சரவணன், தமிழ்.A. அழகன் ஆகியோர் ஒளிப்பதிவு செய்துள்ள விக்டிம் படத்திற்கு லாரன்ஸ் கிஷோர், ஆகாஷ் தாமஸ், செல்வா.RK, வெங்கட் ராஜன் ஆகியோர் படத்தொகுப்பு செய்துள்ளார். வருகிற ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் விக்டிம் ஆந்தாலஜி படம் சோனி லைவ் தளத்தில் ஒளிபரப்பாக உள்ளது. இந்நிலையில் விக்டிம் படத்தின் விறுவிறுப்பான ட்ரைலர் தற்போது வெளியானது. அந்த ட்ரைலர் இதோ…