தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜியை இடமாற்றம் செய்யும் முடிவை ரத்து செய்யக்கோரி 50-கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

lawyersசென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜியை இடமாற்றம் செய்யும் முடிவை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்ற ஆவின் வளாகம் முன்பு அனைத்து ஜனநாயக ஒருங்கிணைப்பு குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் 50ற்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர். சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜியை இடமாற்றம் செய்ததில் மத்திய அரசினுடைய தலையீடு உள்ளதாக மூத்த வழக்கறிஞர் என்.ஜி.ஆர்.பிரசாத் தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மூத்த வழக்கறிஞர் என்.ஜி.ஆர்.பிரசாத்,
அரசியலமைப்பின் சேவகர்களை இவ்வாறாக பணியிட மாற்றம் செய்து கொண்டே இருந்தால் நீதிபதிகள்  இருப்பார்கள் ஆனால் நீதிமன்றம் இருக்காது எனவும் கொலிஜியம் முதல்முறையாக அரசியல் சாசனத்தில் இல்லாத அதிகாரத்தை செயல்படுத்தி வருவதாகவும், அடிக்கடி இட மாற்றம் என்பது நடைபெற்றுக் கொண்டிருப்பதாக தெரிவித்தார்.

மேலும் நேர்மையான தீர்ப்பு வழங்கியதன் காரணமாக ஆடு பலியாகி  விட்டதாகவும்,  முக்கிய தீர்ப்பு வழங்கியவர்கள் அனைவருமே  பலியாகியுள்ளனர் என்றும் தெரிவித்தார். தலைமை நீதிபதியை எதற்காக பணியிட மாற்றம் செய்தார்கள்  என்பதை விளக்க வேண்டும். மேலும், எந்தவொரு காரணமும் கூறாமல் மேகாலயா நீதிமன்றத்திற்கு மாற்றியது பயங்கரமான ஒன்று. எந்த ஒரு காரணமும் இல்லாமல் பணியிட மாற்றம் செய்தது சர்வாதிகாரம் போன்றது என்றும் தெரிவித்தார்.


இந்நிலையில் இதற்கு முன் நீதிபதி தஹில் ரமாணியை மேகலாயா நீதிமன்றத்திற்கு நீதிபதியாக பணி மாற்றம் செய்தார்கள் ஆனால் அதை அவர், எதிர்த்தன் காரணமாக சிபிஐ விசாரணை நடைபெற்றது. அவரையும் எதற்காக இடமாற்றம் செய்தார்கள் என்பதை விளக்கவில்லை. இது அரசியல் சாசனத்திற்கு முரணாக உள்ளது எனவும் மேலும் தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜியை  இடமாற்றம் செய்ததில் மத்திய அரசினுடைய தலையீடு உள்ளதாகவும் மூத்த வழக்கறிஞர் என்.ஜி.ஆர்.பிரசாத் தெரிவித்தார்.