பாலிவுட்டில் ரீ என்ட்ரி கொடுக்கும் ஜோதிகா.. ஹீரோவாக முன்னணி நடிகர்.. உற்சாகத்தில் ரசிகர்கள் - வைரலாகும் Glimpse இதோ..

பாலிவுட்டில் ரீ என்ட்ரி கொடுக்கும் ஜோதிகா - Jyothika Bollywood movie announcement goes viral | Galatta

தமிழ் சினிமாவில் மிக முக்கியமான நடிகைகளில் ஒருவர் ஜோதிகா. தமிழில் 1998 ம் ஆண்டு எஸ் ஜே சூர்யா இயக்கத்தில் வெளியாகி மிகபெரிய ஹிட் அடித்த ‘வாலி’ திரைப்படத்தில் சில காட்சிகளில் மட்டும் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் ஜோதிகா பின் தொடர்ந்து ‘பூவெல்லாம் கேட்டுப்பார்’ திரைப்படத்தில் சூர்யாவுடன் ஜோடி சேர்ந்து கதாநாயகியாக அறிமுகமானார். அதன் பின் தொடர்ந்து அஜித்,விஜய்,சூர்யா,அர்ஜுன், கமல் என்று 90 களில் இருந்த மிக முக்கியமான கதாநாயகர்களின் படங்களில் நடித்து தமிழில் முன்னணி நடிகையானார் ஜோதிகா. அப்போதே பெண்கள் மையப்படுத்திய திரைப்படங்களில் நடித்து கவனம் பெற்றவர் ஜோதிகா அதன் படி, ‘சிநேகிதியே’, ‘த்ரீ ரோசஸ்’ ஆகிய திரைப்படங்கள் மக்கள் மனதை கவர்ந்தவை. தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் பல வெற்றி படங்களில் நடித்து வந்த ஜோதிகா தமிழ் சினிமாவின் பிரபல ஹீரோவான சூர்யாவை காதலித்து 2006 ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அதன் பின் நடிப்பதில் ஒய்வு எடுத்துக் கொண்டார் ஜோதிகா. பின்னர் தனது கணவரும் நடிகருமான சூர்யாவுடன் இணைந்து பட  தயாரிப்பில் இறங்கினார். சூர்யா ஜோதிகாவின் 2D தயாரிப்பு நிறுவனம் சார்பில் கடந்த 2015 ல் ‘காற்றின் மொழி’ திரைப்படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்தார். நல்ல வரவேற்பு கிடைத்ததையடுத்து தொடர்ந்து படங்களில் நடிக்க தொடங்கினார். பல வெற்றிப்படங்களை பார்த்த ஜோதிகாவின் இரண்டாம் இன்னிங்க்ஸ் ரசிகர்களை அதிகம் கவர்ந்தது.

கோலிவுட்டில் இரண்டாவது இன்னிங்க்ஸில் வெற்றி பெற்ற ஜோதிகா தற்போது பாலிவுட்டில் ரீ என்ட்ரி கொடுக்கவுள்ளார். ஜோதிகா நடிப்பதற்கு வரும்போது முதல் முதலில் நடித்தது இந்தியில் தான். அதன் பின் தான் தமிழில் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பின் ‘லிட்டில் ஜான்’ மூன்று மொழியில் வெளியானது. நீண்ட இடைவெளிக்கு பின் தற்போது ஜோதிகா பாலிவுட் படத்தில் நடித்துள்ளார்.

போல்லன்ட் இன்டஸ்ட்ரீ நிறுவனரும் பிரபல தொழிலதிபருமான ஸ்ரீகாந்த் பொல்லா (கண் பார்வையற்றவர்) அவர்களின் வாழ்கை வராலாற்றை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்படவுள்ள திரைப்படம் ‘ஸ்ரீ’. துஷார் ஹிரானந்தனி  இயக்கவிருக்கும் இப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் பிரபல பாலிவுட் நடிகர் ராஜ்குமார் ராவ் நடிக்கிறார். அதில் முக்கிய கதாபாத்திரத்தில் ஜோதிகா நடிக்கவிருக்கிறார். வரும் செப்டம்பர் மாதம் 15 ல் வெளியாகவுள்ள இப்படத்தின் முன்னோட்டம் தற்போது வெளியாகியுள்ளது.  இந்த முன்னோட்டத்தை பகிர்ந்த ஜோதிகா “பலரது வாழ்க்கையை மாற்றக் கூடிய ஊக்கமான இந்த கதையில் நடிப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

 

View this post on Instagram

A post shared by Jyotika (@jyotika)

இதனையடுத்து ஜோதிகாவின் பதிவு இணையத்தில் ரசிகர்களால் வைரலாகி வருகிறது. ஜோதிகா தற்போது மலையாளத்தில் ரீ என்ட்ரி கொடுத்து மம்மூட்டியுடன் ‘காதல் தி கோர்’ என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இனம், மதம், நாடு என்று சர்ச்சையை கிளப்பிய திருமண ஆடை.. அவதூறு பேசியவர்களுக்கு பதிலடி – பாகிஸ்தான் நடிகையின் பதிவு வைரல்..
சினிமா

இனம், மதம், நாடு என்று சர்ச்சையை கிளப்பிய திருமண ஆடை.. அவதூறு பேசியவர்களுக்கு பதிலடி – பாகிஸ்தான் நடிகையின் பதிவு வைரல்..

100 ரசிகர்களுடன் மணாலிக்கு பறந்த விஜய் தேவரகொண்டா.. உற்சாகத்தில் குதூகலித்த ரசிகர்கள் – வைரலாகும் வீடியோ இதோ..
சினிமா

100 ரசிகர்களுடன் மணாலிக்கு பறந்த விஜய் தேவரகொண்டா.. உற்சாகத்தில் குதூகலித்த ரசிகர்கள் – வைரலாகும் வீடியோ இதோ..

“அது அவருடைய உழைப்பு..” தளபதி விஜய் குறித்து அவரது தந்தையும் இயக்குனருமான எஸ்.ஏ. சந்திரசேகர் – வைரலாகும் வீடியோ இதோ..
சினிமா

“அது அவருடைய உழைப்பு..” தளபதி விஜய் குறித்து அவரது தந்தையும் இயக்குனருமான எஸ்.ஏ. சந்திரசேகர் – வைரலாகும் வீடியோ இதோ..