"சர்ப்ரைஸாக வருகிறதா அஜித் குமாரின் AK62 அப்டேட்?"- லைகா ப்ரொடக்ஷன்ஸ் அறிவிப்பால் ரசிகர்கள் கொண்டாட்டம்!

அஜித் குமாரின் AK62 அறிவிப்புக்காக காத்திருக்கும் ரசிகர்கள்,Lyca productions ajith kumar ak62 movie big announcement | Galatta

எல்லா தரப்பு ரசிகர்களுக்கும் மிகவும் பிடித்த கதாநாயகர்களில் ஒருவராகவும், தென்னிந்திய சினிமாவில் உச்ச நட்சத்திர நாயகர்களில் ஒருவராகவும் திகழும் அஜித் குமார் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் துணிவு. தனது முதல் இரண்டு திரைப்படங்களான சதுரங்க வேட்டை மற்றும் தீரன் அதிகாரம் ஒன்று ஆகிய திரைப்படங்களின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குனர் H.வினோத் பாலிவுட்டில் சூப்பர் ஹிட்டான பின்க் திரைப்படத்தின் ரீமேக்காக நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் அஜித் குமாருடன் முதல்முறையாக இணைந்தார். 

நேர்கொண்ட பார்வை திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக வலிமை திரைப்படத்தில் அஜித் குமார் - H.வினோத் வெற்றி கூட்டணி மீண்டும் இணைந்தது. அதிரடி ஆக்சன் திரைப்படமாக வெளிவந்த வலிமை திரைப்படமும் வெற்றியைப் பெற ஹாட்ரிக் வெற்றிக்காக மூன்றாவது முறையாக தொடர்ந்து இணைந்த அஜித் குமார் - H.வினோத் கூட்டணியில் அடுத்து தயாரான திரைப்படம் தான் துணிவு. அஜித் குமாருடன் பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடிக்க, சமுத்திரக்கனி, ராஜதந்திரம் வீரா,  பிரபல பட்டிமன்ற பேச்சாளர் மோகனசுந்தரம், பால சரவணன், GM.சுந்தர், சிபி புவனச்சந்திரன், ஜான் கொக்கென், விஸ்வநாத் உத்தப்பா, பிக் பாஸ் பாவணி, தர்ஷன், அமீர் மற்றும் மமதி சாரி உட்பட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 

நீரவ் ஷா ஒளிப்பதிவில், விஜய் வேலுக்குட்டி படத்தொகுப்பு செய்துள்ள துணிவு திரைப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். நடன இயக்குனராக கல்யாண் மாஸ்டர் பணியாற்றியுள்ள துணிவு படத்தில் ஸ்டண்ட் இயக்குனராக சுப்ரீம் சுந்தர் பணியாற்றியுள்ளார். போனி கபூர் அவர்களின் தயாரிப்பில், ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட கடந்த ஜனவரி 11ஆம் தேதி பொங்கல் வெளியீடாக ரிலீசான துணிவு திரைப்படம் பக்கா அதிரடி ஆக்சன் படமாக அனைத்து தரப்பு ரசிகர்களாலும் கொண்டாடப்பட்டது. இதனை அடுத்து அஜித் குமாரின் திரைப்பயணத்தில் 62வது திரைப்படமாக தயாராகும், AK62 திரைப்படத்தை தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான லைகா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. 

முன்னதாக AK62 திரைப்படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. நடிகர் அஜித்குமார் உடன் முதல் முறையாக இயக்குனர் விக்னேஷ் சிவன் இணையும் AK62 திரைப்படத்திற்கு வேதாளம் மற்றும் விவேகம் ஆக்கிய திரைப்படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக இணைந்து அனிருத் இசை அமைக்க உள்ளார் என்றும் அறிவிக்கப்பட்டது. இதனிடையே சமீபத்தில் AK62 திரைப்படத்திலிருந்து விக்னேஷ் சிவன் விலகியிருப்பதாக தற்போது செய்திகள் வெளிவந்துள்ள நிலையில், அவருக்கு பதிலாக அதிரடி ஆக்சன் திரைப்படங்களை தொடர்ந்து இயக்கி வரும் இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கவுள்ளதாக செய்திகள் பரவி வருகின்றன. மேலும் AK62 திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. 

இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகளுக்காக ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.இந்நிலையில் லைகா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “நாளை ஒரு அட்டகாசமான நாளாக இருக்கப் போகிறது. தொடர்ந்து யோசியுங்கள்!! நாளை (மார்ச் 2) காலை 10:30 மணிக்கு மிகப் பெரிய அறிவிப்போடு வருகிறோம்” என குறிப்பிட்டு பதிவிட்டுள்ளனர். எனவே இந்த பெரிய அறிவிப்பு அஜித்குமாரின் AK62 திரைப்படத்திற்கான அறிவிப்பாக இருக்கலாம் என சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர். நாளை காலை வரை காத்திருப்போம்.

லைகா ப்ரொடக்ஷ்னஸின் அந்த பதிவு இதோ…
 

Tomorrow is going to be an exciting day 🤩✨

Keep guessing it, while we come up with a BIG ANNOUNCEMENT at 10:30AM tomorrow! 🤗#LycaProductions 🌟 pic.twitter.com/R87FefbFsV

— Lyca Productions (@LycaProductions) March 1, 2023

ராகவா லாரன்ஸின் அதிரடி ஆக்ஷனில் வரும் ருத்ரன்... இசை வெளியீட்டு விழா குறித்த ருசிகர தகவல் இதோ!
சினிமா

ராகவா லாரன்ஸின் அதிரடி ஆக்ஷனில் வரும் ருத்ரன்... இசை வெளியீட்டு விழா குறித்த ருசிகர தகவல் இதோ!

சினிமா

"ஆட்ட நாயகன் தளபதி விஜயின் வாரிசு பட 50வது நாள் கொண்டாட்டம்!"- லியோ தயாரிப்பாளரின் செம்ம மாஸ் பதிவு இதோ!

பிரம்மிப்பின் உச்சமாக வரும் பொன்னியின் செல்வன் பாகம்-2... சர்ப்ரைஸாக வந்த அட்டகாசமான GLIMPSE வீடியோ இதோ!
சினிமா

பிரம்மிப்பின் உச்சமாக வரும் பொன்னியின் செல்வன் பாகம்-2... சர்ப்ரைஸாக வந்த அட்டகாசமான GLIMPSE வீடியோ இதோ!