உலகநாயகன் கமல்ஹாசன் - இயக்குனர் இமயம் பாரதிராஜா திடீர் சந்திப்பால் உற்சாகத்தில் ரசிகர்கள்... ட்ரெண்டாகும் புகைப்படங்கள் இதோ!

கமல்ஹாசன் பாரதிராஜா சந்திப்பின் புகைப்படங்கள்,ulaganayagan kamal haasan met director bharathi raja photos | Galatta

இந்திய சினிமாவின் புகழை உலகறிய செய்த மாபெரும் கலைஞனாகவும், தமிழ் சினிமாவை இந்திய அளவில் சிறந்த சினிமாக்களில் ஒன்றாக தூக்கிப்பிடித்த பெருமைமிகு நாயகனாகவும், ஈடு இணையற்ற திரை ஜாம்பவானாகவும் திகழும் உலகநாயகன் கமல்ஹாசன் கிட்டத்தட்ட 63 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து மக்களை மகிழ்வித்து வருகிறார். அந்த வகையில் கமல்ஹாசனின் திரை பயணத்தில் மிக முக்கிய திரைப்படமாக அமைந்தது கடைசியாக இவரது நடிப்பில் வெளிவந்த விக்ரம் திரைப்படம். உலக நாயகனின் தீவிர ரசிகரான இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனக்கு கிடைத்த வாய்ப்பை மிகச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டு அனைத்து தரப்பு ரசிகர்களும் கொண்டாடும் வகையிலான பக்கா ஆக்சன் திரில்லர் திரைப்படமாக வழங்கிய விக்ரம் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸிலும் மிகப்பெரிய வசூல் செய்தது.

முன்னதாக கமல்ஹாசனுக்கு தேசிய விருது பெற்றுத்தந்த இந்தியன் திரைப்படத்தின் தொடர்ச்சியாக பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் உடன் மீண்டும் கை கோர்த்த உலக நாயகன் கமல்ஹாசன் இந்தியன் 2 திரைப்படத்தில் தற்போது நடித்த வருகிறார். இதனைத் தொடர்ந்து அடுத்ததாக நாயகன் திரைப்படத்திற்கு பிறகு நீண்ட இடைவெளிக்கு பின் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் புதிய படத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் நடிக்க இருக்கிறார். மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல், ரெட் ஜெயன்ட் மூவிஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து வழங்கும் இந்த KH234 திரைப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளார். விரைவில் KH234 திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே விக்ரம் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது பேசிய இயக்குனர் பா.ரஞ்சித் மதுரையை கதைக்களமாகக் கொண்டு விருமாண்டி பாணியில் கமல்ஹாசனின் திரைப்படத்தை இயக்க விரும்புவதாக தெரிவித்த நிலையில், அதே விழாவில் பேசும்போது கமல்ஹாசனும் அதனை உறுதிப்படுத்தினார். இது தவிர இயக்குனர் வெற்றிமாறன் அவர்கள் கமல்ஹாசன் அவர்களுக்கு ஒரு கதை சொல்லி இருப்பதாகவும் அதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் தெரிகிறது. மேலும் மலையாளத்தில் ஃபகத் பாசில் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான மாலிக் படத்தின் இயக்குனர் மகேஷ் நாராயணன் இயக்கத்தில் கமல்ஹாசன் ஒரு படத்தில் நடிக்கிறார். இப்படத்திற்கு திரைக்கதையும் கமல்ஹாசன் எழுதுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே தமிழ் சினிமாவின் மிகப்பெரிய ஆளுமையாக மக்களின் மனம் கவர்ந்த இயக்குனராக திகழும் இயக்குனர் இமயம் பாரதிராஜா மற்றும் உலகநாயகன் கமல்ஹாசன் இருவரும் சந்தித்துள்ளனர். எனவே இந்த திடீர் சந்திப்பு அடுத்த திரைப்படத்திற்கான சந்திப்பாக இருக்கலாம் என ரசிகர்கள் உற்சாகத்தோடு எதிர்பார்க்கின்றனர். முன்னதாக இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்களின் 16 வயதினிலே, சிகப்பு ரோஜாக்கள், டிக் டிக் டிக், கைதியின் டைரி உள்ளிட்ட திரைப்படங்கள் கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்து மக்களின் இதயங்களை கொள்ளையடித்தன. இந்த வரிசையில் மீண்டும் இந்த கூட்டணி இணையுமா என ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்நிலையில் பாரதிராஜா அவர்களை தனது அலுவலகத்தில் சந்தித்த உலகநாயகன் கமல்ஹாசன் சந்திப்பின் புகைப்படங்களை தற்போது வெளியிட்டுள்ளார். சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகும் அந்த புகைப்படங்கள் இதோ…
 

 

View this post on Instagram

A post shared by Kamal Haasan (@ikamalhaasan)

சினிமா

"4 வருடங்களைக்குப் பின் வெள்ளித்திரையில் அனுஷ்கா மாஸ் கம்பேக்... புதிய பட டைட்டில் - ஃபர்ஸ்ட் லுக் இதோ!

சினிமா

"சந்திரமுகி 2 படத்திற்காக பிரம்மிக்க வைக்கும் லுக்கில் கங்கனா ரனாவத்!"- அட்டகாசமான ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் இதோ!

ராகவா லாரன்ஸின் அதிரடி ஆக்ஷனில் வரும் ருத்ரன்... இசை வெளியீட்டு விழா குறித்த ருசிகர தகவல் இதோ!
சினிமா

ராகவா லாரன்ஸின் அதிரடி ஆக்ஷனில் வரும் ருத்ரன்... இசை வெளியீட்டு விழா குறித்த ருசிகர தகவல் இதோ!